It was great to meet Thalaiva superstarrajini again today

நட்சத்திரக் கலை விழாவிற்காக மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அந்நாட்டுப் பிரதமரை இன்று சந்தித்தார்.

நடிகர் சங்கப் கட்டடத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் நாளை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திரக் கலை விழா தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த , உலக நாயகன் கமல்ஹாசன் உட்படப் பலர் மலேசியா சென்றுள்ளனர்.

ரஜினியின் ஆன்மீக அரசியல் பிரவேசத்திரற்க்குப்பின் கமலை ரஜினி முதன்முதலில் சந்திப்பதால், அரசியல் சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

இந்நிலையில், அதனைப் பின்னுக்குத் தள்ளும் விதமாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்- நடிகர் ரஜினி சந்திப்பு இன்று நிகழ்ந்துள்ளது. பிரதமரின் மாளிகைக்கு சென்ற ரஜினி, ரசாக்குடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நஜீப் ரசாக் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவா, சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

அரசியல் கட்சி அறிவிக்கப்போவதாக ரஜினி அறிவித்துள்ள நிலையில், ஒரு நாட்டின் பிரதமரே அவரைத் தலைவர் என குறிப்பிட்டுள்ளது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.