Asianet News TamilAsianet News Tamil

அதிமுக எக்ஸ் விஐபியின் பினாமி வீட்டில் ஐடி ரெய்டு... வந்தவாசியில் கட்டுக்கட்டாய் சிக்கிய ஆவணங்கள்..!

வந்தவாசியில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் 8 மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. 
 

IT Raid of AIADMK's former VIP's proxy house
Author
Tamil Nadu, First Published Feb 5, 2019, 1:26 PM IST

வந்தவாசியில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் 8 மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

 IT Raid of AIADMK's former VIP's proxy house

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியின் முன்னாள் அதிமுக செயலாளரும் தற்போதைய அதிமுக ஜெ. பேரவை செயலாளருமாக இருப்பவர் பாஸ்கர் ரெட்டியார். வந்தவாசி கெஜலட்சுமி நகரில் வசித்து வரும் இவரது இல்லத்தில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழு அவரது வீட்டுக்குள் நுழைந்து ஆய்வு செய்து வருகின்றனர்.IT Raid of AIADMK's former VIP's proxy house

தமிழ்நாடு அரசின் ஒப்பந்ததாரராக பதிவு செய்து பல பணிகளை எடுத்து செய்து வருகிறார். இவர் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த அதிமுக முன்னால் அமைச்சர் முக்கூர் சுப்ரமணியன் ஆதரவாளர். பாஸ்கரை அவரது பினாமி என கட்சி வட்டாரத்தில் அழைப்பார்கள். இவருடைய மனைவி புஷ்பா செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை துணைத்தலைவராக உள்ளார். இவர்களது வீட்டில் பூரணசந்த் மீனா தலைமையிலான 8 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். வீட்டின் முன்பக்கக் கதவை அடைத்த அவர்கள் வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை.IT Raid of AIADMK's former VIP's proxy house

இந்தச் சோதனையில், வருமான வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.  ஆளும்கட்சியை சேர்ந்தவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios