Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசாங்கமே... கொத்துக்கொத்தாக மக்கள் மடிவது உங்களால்தான்... ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு..!

ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஐசியூ படுக்கைகள் இல்லாததால்தான் பல இறப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கமே, இது உங்களால் தான்

It is the central government ... it is you who is killing the masses ... Rahul Gandhi accusation
Author
Delhi, First Published Apr 23, 2021, 2:51 PM IST

இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை, ஐசியூ படுக்கைகள் இல்லாத காரணங்களால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

It is the central government ... it is you who is killing the masses ... Rahul Gandhi accusation

இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. நேற்று ஒரேநாளில் நாடு முழுவது 3.32 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால், நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இது குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ’’நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைவதற்கு வேண்டுமானால் கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம். ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ஐசியூ படுக்கைகள் இல்லாததால்தான் பல இறப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கமே, இது உங்களால் தான்' என குற்றம் சாட்டியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios