கன்னியாகுமரி மக்களவை தொகுதி எங்கள் தொகுதி; இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் என கே. எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திருமாவளவன் மீது வழக்கு போட எந்த வித முகாந்திரமும் இல்லை. புராணங்களில் உள்ளதை மறுப்பதிவு செய்துள்ளார். புராணங்களில் பெண்களை இழிவாக கூறியுள்ளனர். திருமாவளவன் இந்து மத்ததிற்கு எதிராக பேசவில்லை, மதத்தில் உள்ள தவறுகளை நாமே சுட்டிக்காட்டினால் தவறில்லை. திருமாவளவன் தவறாக எதுவும் கூறவில்லை. நாங்கள் திருமாவளவனை ஆதரிக்கிறோம்.

7.5 சதவீதம் மருத்துவ துறையில் இட ஒதுக்கீடு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆளுநர் சுணக்கம் காட்டுவதை ஏற்க முடியாது, அவர் காலச்சக்கரத்தை மாற்றி சுழற்றுகிறாரா? என தோன்றுகிறது. உடனடியாக மசோதாவில் கையெழுத்து இட வேண்டும். இதை சட்டமாக்க வேண்டும். நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம், மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் எழுதும் வகையில் நீட் தேர்வு அமைய வேண்டும். படிப்பது ஒரு பாடத்திட்டம், தேர்வு எழுதுவது மற்றொறு பாடத்திட்டமாக இருப்பதை எதிர்க்கிறோம்.

மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி எங்கள் தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் என கே. எஸ்.அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.