It is illusion that the ruling party will win in RKNagar

ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சி ஜெயிக்கும் என்பது மாயை எனவும் டிடிவி தினகரன் சரித்தம் படைத்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவி வருகின்றது. 

சசிகலாவே அடுத்த சி.எம் என கூறி வந்த அனைவரும் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி அவரை கட்சியில் இருந்து கழட்டி விட்டனர். டிடிவியை கட்சி உறுப்பினரே இல்லை என கூறி ஓரங்கட்டினர் ஆளுங்கட்சியினர். 

இதையடுத்து தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலையையும் கட்சியையும் எடப்பாடி பன்னீர் செல்வம் மீட்டனர். 

இதையடுத்து நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 

இதைதொடர்ந்து இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் 4வது சுற்றின் முடிவில் 11,816 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார். 

அதாவது டிடிவி தினகரன் 20,298 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 9672 வாக்குதள் பெற்றுள்ளார். 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.ராஜேந்தர் ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சி ஜெயிக்கும் என்பது மாயை எனவும் டிடிவி தினகரன் சரித்தம் படைத்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார். 

துரோகம் என்றுமே வெற்றி பெறாது எனவும் டி.ஆர். தெரிவித்துள்ளார்.