Asianet News TamilAsianet News Tamil

இடி மின்னலுடன் தமிழகத்தில் கொட்டி தீர்க்கப் போகிறது..!! 8 மாவட்டங்களில் அடித்து ஊற்றப் போகிறது என எச்சரிக்கை.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் பெரும்பாலான  இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

It is going to settle in Tamil Nadu with thunder and lightning .. !!
Author
Chennai, First Published Nov 6, 2020, 1:21 PM IST

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,  ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

It is going to settle in Tamil Nadu with thunder and lightning .. !!

அடுத்த 48 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால், கடலூர் மற்றும் நீலகிரி தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது

அடுத்த 72 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் பெரும்பாலான  இடங்களில் லேசானது முதல் மிதமானமழைபெய்யக்கூடும். 

It is going to settle in Tamil Nadu with thunder and lightning .. !!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி 12 சென்டிமீட்டர் மழையும், அளவு கெட்டி 10 சென்டிமீட்டர் மழையும், சாம்ராஜ் எஸ்டேட் 9 சென்டிமீட்டர் மழையும், குன்னூர், திருச்சுழி (விருதுநகர்) பரமக்குடி, (இராமநாதபுரம்) தலா 7 சென்டிமீட்டர் மழையும், சுராலகோடு (கன்னியாகுமரி) தூத்துக்குடி ராசிபுரம் (நாமக்கல்) தலா ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios