Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் அடித்து ஊற்றப்போகிறது..!! கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்

It is going to hit and pour in Tamil Nadu in the next 48 hours .. !! Warning to coastal districts
Author
Chennai, First Published Oct 1, 2020, 1:12 PM IST

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர்ர ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டிபதிவாக கூடும்.

It is going to hit and pour in Tamil Nadu in the next 48 hours .. !! Warning to coastal districts

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்,கடந்த 24 மணி நேரத்தில் வானூர் (விழுப்புரம்) 9 சென்டி மீட்டர் மழையும், முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 7 சென்டி மீட்டர் மழையும், திருத்தணி (திருவள்ளூர்) பாண்டிச்சேரி, சோழவந்தான் (மதுரை) குடவாசல் (திருவாரூர்) கஞ்சனூர் (விழுப்புரம்) தலா 5 சென்டி மீட்டர் மழையும், கோபிசெட்டிபாளையம் (ஈரோடு) வலங்கைமான் (திருவாரூர்) சிவகாசி (விருதுநகர்) கும்பகோணம் (தஞ்சாவூர்) நன்னிலம் (திருவாரூர்) கோலியனூர் (விழுப்புரம்) நெமூர் (விழுப்புரம்) அதனபுரம் (விழுப்புரம்) தலா 4 சென்டி மீட்டர் மழையும் காரைக்கால், கமுதி (ராமநாதபுரம்) தரங்கம்பாடி (நாகப்பட்டினம்) பரங்கிப்பேட்டை (கடலூர்) மேலூர் (மதுரை) கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை) தல 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

It is going to hit and pour in Tamil Nadu in the next 48 hours .. !! Warning to coastal districts

மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர்  வரை வீசக்கூடும், இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா, தெற்கு ஒரிசா கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios