திமுக தமிழகத்தை பிடித்த கொரோனா வைரஸ். இதை முழுமையாக ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த சமுதாயமும் மரியாதையாக நடமாட முடியாது என்று பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

காரைக்குடியில் செய்தியார்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா;- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது. ஏனென்றால் முரசொலி அலுவலகம் மூலப்பத்திரம் பிரச்சனை உள்ளது. ஸ்டாலினுக்கு பட்டியல் சமூகத்தின் மீது நவீன தீண்டாமை உள்ளது.

திமுக தமிழகத்தை பிடித்த கொரோனா வைரஸ். இதை முழுமையாக ஒழிக்காமல் தமிழகத்தில் எந்த சமுதாயமும் மரியாதையாக நடமாட முடியாது. திமுகவினர் அவ்வளவு மோசமான தீயசக்திகள். பட்டியல் சமூகத்தைப் பற்றி ஆர்.எஸ்.பாரதி பேசியதாக நான் நினைக்கவில்லை. திமுக, திக அமைப்பு, நீதிக்கட்சியின் டிஎன்ஏவிலேயே பட்டியல் சமூகத்தின் விரோதப் போக்கு இருக்கின்றது.

தயாநிதிமாறன் ஆர்.எஸ்.பாரதியை குண்டாஸில் கைது செய்ய வேண்டும். திமுகவின் ஒன்றிணைவோம் வா ஒரு பப்ளிசிட்டி தான். பிரதமரைப் பற்றி அவதூறு பேசினால் அவர்களுக்குப் புரியும் பாசையில் அதே மாதிரி திருப்பி அடிப்போம். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் நல்ல முடிவு விரைவில் எடுப்பர்கள் என்றார்.