தில் இருந்தால் திமுக இடைதேர்தலில் நிற்க வேண்டியது தானே? ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்..!
மீனவர் வாழ்வாதாரத்தை அழித்து மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. அறிவாலயத்தில் 10 ஆயிரம் அடி கூட சிலை வைத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் பணத்தில் அமைத்துக் கொள்ளுங்கள்.
தேர்தல் விதி நடைமுறையில் உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரவில் சாலை போடுவது ஏன்? ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- மீனவர் வாழ்வாதாரத்தை அழித்து நினைவு சின்னம் தேவையா? மீனவர் வாழ்வாதாரத்தை அழித்து மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. அறிவாலயத்தில் 10 ஆயிரம் அடி கூட சிலை வைத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் பணத்தில் அமைத்துக் கொள்ளுங்கள். மீன் குஞ்சுகள் இனப்பெருக்கம் செய்யும் முகத்துவாரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதால் தான் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிடவில்லை. நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தில்லுடன் தேர்தலில் போட்டியிடுகிறோம். திமுக காங்கிரஸ் கட்சியை நிறுத்துகிறது. தில் இருந்தால் திமுக நிற்க வேண்டியது தானே? திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு பல மடங்கு அதிகரித்துள்ளது.
திமுக அரசு 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் சொல்கிறது. தேர்தல் விதி நடைமுறையில் உள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரவில் சாலை போடுவது ஏன்? கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயக்கடன், நகைக்கடன் உள்ளிட்டவை தள்ளுபடி செய்யவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. தேர்தல் என்றாலே டிடிவி தினகரனுக்கு அச்சம் ஏற்பட்டு விடுகிறது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.