Asianet News TamilAsianet News Tamil

என்னை தமிழினத்திற்கு எதிரியாக சித்தரிப்பது வேதனையளிக்கிறது.!! வலியை கொட்டித் தீர்த்த முத்தையா முரளிதரன்.!!

ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன். அடுத்து எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து, வளர்ந்தவன் தான், எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றுமொரு தவறான செய்தி.

It hurts to portray me as an enemy of Tamil Nadu. !! Muthiah Muralitharan relieved the pain !!
Author
Chennai, First Published Oct 16, 2020, 5:21 PM IST

இலங்கை  கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையை முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் திரைப்படத்தில் முத்தையா முரளி தரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்நிலையில் முரளிதரனாக நடிக்க கூடாது என நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் முத்தையா முரளி தரனே முன் வந்து தன் மீது வைக்கப்படும் குற்றஞ்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: 

அனைவருக்கும் வணக்கம்...

இதுநாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்து வந்துள்ளேன், அது விளையாட்டு ஆனாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கை ஆனாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான 800 திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றி திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லை என்பதாலும், இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள், என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும், அதற்குக் காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான், இந்தத் திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன். 

It hurts to portray me as an enemy of Tamil Nadu. !! Muthiah Muralitharan relieved the pain !!

இலங்கையின் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சா வழியான மலையக தமிழர்கள் தான்.இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார், என் சொந்தங்களின் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பலமுறை நடுத்தெருவில் நின்று இருக்கிறோம், ஆதலால் போரால் நிகழும் இழப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன்  மத்தியிலேயே தான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று சாம்பியனானேன் என்பது பற்றியான படம்தான் 800. 

It hurts to portray me as an enemy of Tamil Nadu. !! Muthiah Muralitharan relieved the pain !!

இது இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துக்கள் தவறாக சித்தரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவு தான். உதாரணமாக நான் 2009 ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019 கூறியதை, தமிழர்களை கொன்று குவித்த நாள் தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள். ஒரு சராசரி குடிமக்களாக சிந்தித்துப் பாருங்கள், போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும் என்பது தெரியாது. என் பள்ளி காலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான். வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால் தான் நிஜம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது, ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால் கடந்த பத்து வருடங்களாக, இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்து 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தினை தெரிவித்தேன். ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன். 

It hurts to portray me as an enemy of Tamil Nadu. !! Muthiah Muralitharan relieved the pain !!

அடுத்து எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து, வளர்ந்தவன் தான், எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றுமொரு தவறான செய்தி. தமிழ் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர் என முரளி கூறுகிறார் என சொல்கின்றனர். இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்வதால் எல்லோரிடமும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்யும். அது இயற்கை. அது என்னிடத்திலும் இருந்தது. காரணம் எனது பெற்றோரும் கூட அப்படிப்பட்ட சிந்தனையில் தான் இருந்தார்கள். அதையும் மீறி கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் பள்ளியின் கிரிக்கெட் அணியில் என்னை பங்கேற்க தூண்டியது. எனது முயற்சியால் அணியில் சேர்ந்து, எனது திறமையால் நான் ஒரு தவிர்க்க இயலாதவனாக மாறினேன். எனவே தான் தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிந்து, உங்கள் திறமை மீது நம்பிக்கை  வைத்து முயற்சி செய்யுங்கள் என்ற எண்ணத்தில் தான் கூறினேன். 

It hurts to portray me as an enemy of Tamil Nadu. !! Muthiah Muralitharan relieved the pain !!

என்னைப் பொறுத்தவரையில் சிங்களர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும், ஈழத் தமிழர்களாக இருந்தாலும், அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையக தமிழனான நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும், ஈழ மக்களுக்கு செய்த உதவிகளே அதிகம். செய்யும் நன்மைகளை சொல்லிக் காட்டுவதை என்றைக்கும் நான் விரும்புவதில்லை. ஆனால் இன்று அதை சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். ஐநாவின் உணவு தூதராக இருந்த போது 2002 ஆம்  ஆண்டு LTTE இன் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும் அந்த திட்டத்தை எடுத்துச் சென்றது முதல், பின் சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகளை அந்த மக்கள் அறிவர். போர் முடிவுற்ற பின் கடந்த 10 வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான foundation of goodness மூலம் ஈழ மக்களுக்கு செய்யும் உதவிகள் தான் அதிகம்.

 It hurts to portray me as an enemy of Tamil Nadu. !! Muthiah Muralitharan relieved the pain !!

ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எனது தொண்டு நிறுவன கிளைகள் மூலம் குழந்தைகள் கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் பல உதவிகள் செய்து வருகிறேன். மக்கள் நல்லிணக்கத்திற்காக வருடாவருடம் Murali harmony cup என்கிற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடத்தி வருகிறோம். இன்னும் இதுபோல் ஏராளமான விடயங்கள் உள்ளது. நான் இலங்கை அணியில் இடம் பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்திருந்தால் நான் இந்திய அணியில் இடம் பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா. இவை அனைத்தும் விடுத்து சிலர் அறியாமையாலும், சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழினத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. எவ்வளவு விளக்கம் அளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும், என்னைப்பற்றி ஒருபக்கம்  தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களும் பொதுமக்களுக்கும் விளக்கத்தை அளிக்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios