விஜயகாந்த் உடல் நிலை மிகவும் பின்னடைவு..! வீடு முன் கண்ணீரில் தொண்டர்கள்- மருத்துவமனையில் போலீசார் குவிப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளநிலையில், அவரது உடல்நிலை மோசமான நிலையை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் கலக்கிய விஜயகாந்த்
தமிழகத்தில் திமுக- அதிமுக கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த விஜயகாந்த் , அரசியலில் தனிக்கென தனி பாதையை உருவாக்கி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. வெளிநாடுகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் அவரால் முன்பை போல திறம்பட அரசியலில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இருந்து போதும் அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து வந்தார். கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து வீடு திரும்பினார்.
இதனையடுத்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போதே அவர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் மீண்டும் நேற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் பின்னடைவை சந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜயாகாந்த வீடு அமைந்துள்ள விருகம்பாக்கத்தில் தொண்டர்கள் கண்ணீர் மல்க குவிந்து வருகின்றனர். மருத்துவமனையிலும் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு.. மூச்சு விடுவதில் சிரமம்.. வெண்டிலேட்டர் சிகிச்சை!