Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது பாஜக வழக்கறிஞரா.? உண்மை என்ன.?

ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத்தை, ஏற்கனவே பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்படவரை ஜாமினில் வெளியே  எடுத்தது பாஜக நிர்வாகி என தகவல் வெளியாகியுள்ளது. 

It has been reported that the person who hurled petrol bombs at the Raj Bhavan was granted bail by a BJP lawyer KAK
Author
First Published Oct 27, 2023, 8:07 AM IST

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகத்தில் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக ஆளுநர் தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக திமுக அரசுக்கு எதிராக ஆளுநர், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது.

 

ஆளுநருக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லையென்றால் தமிழக மக்களின் நிலை என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் ஆளுநருக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சு மற்றும் தாக்குதல் மிரட்டல் உள்ளிட்ட  பல்வேறு புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையெனவும் ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியது.

It has been reported that the person who hurled petrol bombs at the Raj Bhavan was granted bail by a BJP lawyer KAK

யார் இந்த கருக்கா வினோத்

இதற்கு தமிழக டிஜிபி சார்பாக விளக்கமும் அளிக்கப்பட்டது. அதில்,   ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், குண்டு வெடித்தாகவும், குற்றவாளி அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் என சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என டிஜிபி தெரிவித்திருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் யார் இந்த கருக்கா வினோத் என்ற கேள்வியானது எழுந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் சௌத் போக் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில்  பெட்ரோல் நிரம்பிய பாட்டில்களை வீசியுள்ளனர்.

It has been reported that the person who hurled petrol bombs at the Raj Bhavan was granted bail by a BJP lawyer KAK

ஜாமினில் எடுத்தது யார்.?

அதேபோல் 13.07.2017 அன்று வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மண்ணெண்ணெய் நிரம்பிய பாட்டில்களை வீச முற்பட்ட போதும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது பாஜக நிர்வாகி என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வினோத்தை ஜாமீனில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் என்ற தகவல் வெளியானது.

It has been reported that the person who hurled petrol bombs at the Raj Bhavan was granted bail by a BJP lawyer KAK

பாஜக வழக்கறிஞரா.?

இது தொடர்பாக வழக்கறிஞர் முத்தமிழ் செல்வன் கூறுகையில், பாஜகவில் என்னைக் கேட்டு சேர்க்கவில்லை. 2020 ஆம் ஆண்டு கோட்டூர் ராகவன் என்பவர் என்னை பாஜக வழக்கறிஞர் அணியில் சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் பின் அவரை தொடர்பு கொண்டு பாஜகவில் இணையவில்லை என தெளிவுபடுத்திவிட்டேன். வழக்கறிஞராக என்ற முறையில் அனைத்து கட்சிகளுக்கும் வழக்கு நடத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடந்த 2 ஆண்டுகளாகவே பாஜகவில் நான் பொறுப்பில் இல்லையெனவும் கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

Follow Us:
Download App:
  • android
  • ios