பசும்பொன் குருபூஜைக்கு செல்லாத இபிஎஸ்..! கெத்து காட்ட தொண்டர்களோடு களம் இறங்கும் ஓபிஎஸ்

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் செல்லாத நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களோடு பசும்பொன் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.

It has been announced that OPS will participate in the Devar Guru Puja at Pasumpon

முத்துராமலிங்க தேவர் குருபூஜை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அதிமுக சார்பாக தங்க கவசம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியிருந்தார். ஒவ்வொரு ஆண்டும் அதிமுக சார்பாக பொருளாளராக உள்ளவர்கள் வங்கி பெட்டகத்தில் உள்ள தங்க கவசத்தை வாங்கி ஒப்படைப்பார்கள். ஆனால் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக இரண்டு பிரிவாக உள்ளது. இதனையடுத்து முத்துராம லிங்க தேவருக்கான தங்க கவசத்தை யார் ஒப்படைப்பது என்ற பிரச்சனை எழுந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத் தங்க கவசத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்தநிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்விற்கு எடப்பாடி பழனிசாமி செல்லவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.

It has been announced that OPS will participate in the Devar Guru Puja at Pasumpon

குருபூஜைக்கு செல்லாத இபிஎஸ்

இந்தநிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் 115-வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜையை முன்னிட்டு 30-10-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 11-30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லாதது ஏன்? ஜெயக்குமார் கொடுத்த வேற லெவல் விளக்கம்..!

It has been announced that OPS will participate in the Devar Guru Puja at Pasumpon

ஆதரவாளர்களுடன் களம் இறங்கும் ஓபிஎஸ்

இந்த நிகழ்வில்  கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஆர். வைத்திலிங்கம்; கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. குப. கிருஷ்ணன்; கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. J.C.D. பிரபாகர்; கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. P.H. மனோஜ் பாண்டியன்; கழக அமைப்புச் செயலாளரும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. வெல்லமண்டி N. நடராஜன்; கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பதவி இல்லாததால் ஓபிஎஸ் சூழ்ச்சி செய்து வருகிரார்... ஆர்.பி.உதயகுமார் சாடல்!!

It has been announced that OPS will participate in the Devar Guru Puja at Pasumpon

தொண்டர்களுக்கு அழைப்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. ஆர். தர்மர் அவர்கள் மேற்கொள்வார். மேற்படி நிகழ்ச்சியில், அனைத்து தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள்,முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியங்கள்

மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் பாஜக அரசு..! போராட்டத்திற்கு தேதி குறித்த திருமாவளவன்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios