பதவி இல்லாததால் ஓபிஎஸ் சூழ்ச்சி செய்து வருகிரார்... ஆர்.பி.உதயகுமார் சாடல்!!
ஓபிஎஸ்க்கு பதவி இல்லாததால் அவர் சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து வருவதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
ஓபிஎஸ்க்கு பதவி இல்லாததால் அவர் சூதுகளையும், சூழ்ச்சிகளையும் செய்து வருவதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, மாமன்னர்கள் மருது பாண்டியரின் 221 வது குருபூஜை முன்னிட்டு, சிவரக்கோட்டையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு முதன் முதலில் அரசின் சார்பில் விழா நடத்தியவர் புரட்சிஅம்மா, அதனை தொடர்ந்து திருப்பத்தூரில் மணி மண்டபம் அமைத்திருந்தவர் புரட்சித்தலைவர் அம்மா, தற்போது சிவரக்கோட்டையில் மக்கள் கோரிக்கை ஏற்று மருதுபாண்டியர்கள் சிலை அமைக்க அரசாணை தந்தவர் எடப்பாடியார் ஆவார். பதிமூன்றை ( 13.1/2)எடைஉள்ள தங்ககவசத்தை புரட்சிதலைவி அம்மா பசும்பொன்னாருக்கு வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் 27ஆம் தேதி 30 ஆம் தேதி வரை மூன்று தான் நடைபெறும் குரு பூஜையில் அந்த தங்க கவசத்தை அதிமுக சார்பில் அனுபவிப்பதை கடந்த 2014 ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு துரோகத்தின் விளைவாக அந்த தங்க கவசத்தை அவரின் திருஉருவத்திற்கு சாத்த தடை ஏற்படுத்தி விடுமோ என்று மக்கள் அஞ்சினார்கள்.
இதையும் படிங்க: நாய்,பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது..! செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை
இதற்கு தடை ஏற்படுத்திட சூழ்ச்சி செய்தார்கள், சூது செய்தார்கள், அந்தப் பழியை நம்மில் சுமத்த சூழ்ச்சியும் செய்கிறார்கள் என்பதை அறிந்து தான், வங்கி கணக்கை முடக்கப்பார்கிறார்கள் துரோகிகள் என்று தெரிந்த பின்பு தான் நீதிமன்றத்துக்கு சென்று, எப்படியாவது தங்க கவசம் தெய்வீக திருமகனாருக்கு அணிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது இன்றைக்கு நீதிமன்றம் தீர்ப்பை அளித்திருக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது, அதன் மூலம் அவரின் திருமகனாருக்கு கவசம் சாத்திருக்கின்ற காட்சி தென் மாவட்ட மக்களின் மனதில் உள்ளம் குளிர செய்தது என்பதை இன்றைக்கு தடுக்க நினைத்தவர்கள், குழப்பத்தை விளைவிக்கும் நினைத்தவர்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் இன்றைக்கு எடப்பாடியார் முயற்சியிலே அனுவிக்கப்பட்டுள்ளது. இதுதான் எதார்த்தமான சத்தியமான உண்மை. இது அதிமுக சொத்து, அம்மாவின் சொத்து இதை கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் முறையிட்டபோது வங்கி வழங்கதயாராக இருக்கும் பொழுது அங்கே தடை ஏற்படுத்தினார்கள், பிறகு நீதிமன்ற ஆணையைப் பெற்று தங்க கவசம் வேண்டும் என்ற பொழுது அங்கேயும் தடை ஏற்படுத்தினார்கள், தேவர் நினைவு ஆலய காப்பாளர்கள் இடத்தில் முறையிடுகிற போது அங்கேயும் சென்று தடை ஏற்படுத்தினார்கள், நீங்கள் எத்தனை தடை ஏற்படுத்தினால், தேவர் ஆசி உங்களுக்கு இல்லாத காரணத்தினால் உங்களால் கவசத்தை எடுக்க முடியவில்லை.
இதையும் படிங்க: வாரிசு படத்தில் உண்மையில் உதயநிதி தான் நடித்து இருக்க வேண்டும்.. பங்கமாய் கலாய்க்கும் செல்லூர் ராஜு.!
எடப்பாடியாருக்கு தேவரின் ஆசி இருப்பதினால் தேவர் திருமேனியிலே தங்க கவசம் இன்றைக்கு சாத்தப்பட்டுள்ளது. எடப்பாடியாருக்கு தெய்வதிருமனார் அருளாசி இருந்த காரணத்தினால் தான் அன்னை தமிழகத்தில் முதலமைச்சராக நான்கரை ஆண்டு காலம் முழு ஆயிலாக இருந்தார், உங்களுக்கு (ஓபிஎஸ்)பதவி இல்லை என்ற காரணத்தினால் நீங்கள் செய்கின்ற சூதுகளையும், சூழ்ச்சிகளையும் நாங்கள் எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களின் சூழ்ச்சிகளும், சூதுகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது எங்களுக்குத் தான் தெரியும். நிச்சயமாக எடப்பாடியார் பசும்பொன்னுக்கு வருவார், காளையார்கோவிலுக்கு வருவார், இந்த உசிலம்பட்டிக்கும் வருவார் அது நிச்சயமாக நடைபெறும் அந்த நாள் தென் தமிழ்நாட்டில் பொன்னாக அமையும், வருகின்ற 30 ஆம் தேதி சென்னை நந்தனத்தில் புரட்சித்தலைவி அம்மாவால் அமைக்கப்பட்ட தெய்வத் திருமகனாரின் வெண்கலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் என்று தெரிவித்தார்.