Asianet News TamilAsianet News Tamil

மிகுந்த மன வேதனை அளிக்கிறது.. தயவு செய்து 10 லட்சம் கொடுங்கள்.. தமிழக அரசை நெருக்கும் அண்ணாமலை.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி சீசன் என்பதால் பட்டாசு வணிகத்தில் வணிகர்கள் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும்.

It gives a lot of mental anguish .. Please give 10 lakhs .. Annamalai demand Tamil Nadu government.
Author
Chennai, First Published Oct 27, 2021, 9:09 AM IST

பட்டாசு விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது என்றும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு, தமிழக அரசு,  நிவாரண நிதியாக குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்றும்  பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக,  சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து, அருகில் இருக்கிற பேக்கரியில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 9 க்கு மேற்பட்டோர் மரணமடைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. 

It gives a lot of mental anguish .. Please give 10 lakhs .. Annamalai demand Tamil Nadu government.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி சீசன் என்பதால் பட்டாசு வணிகத்தில் வணிகர்கள் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். அதேசமயம் பட்டாசுகளை சேமித்து வைப்பதும், வணிகத்தில் ஈடுபடுவதும் அரசு எந்த வழிபாட்டு முறையை அறிவுறுத்தி இருக்கிறதோ அதைப் பின்பற்றியே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் ஆகும். இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தகுந்த பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால் தவிர்க்க முடியும். என்பதை நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். 

It gives a lot of mental anguish .. Please give 10 lakhs .. Annamalai demand Tamil Nadu government.

இருப்பினும் இதுபோன்ற கவனமின்மை காரணமாக விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுவது அதிர்ச்சியும் வேதனையும் தான் அளிக்கும் என்பது உறுதி. பட்டாசு வணிகத்தில் ஈடுபடுபவர்கள் தகுந்த பாதுகாப்பு முறைகளை கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டுமென்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு, தமிழக அரசு, நிவாரண நிதியாக குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios