Asianet News TamilAsianet News Tamil

தலைக்கு மேல் கத்தி... பதவி பறிபோகும் பயத்தில் கார்த்தி சிதம்பரம்... திருப்பி அனுப்பிய நீதிமன்றம்..!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவரது மனைவி ஸ்ரீநிதி. இருவரும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ.4.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். 

IT department case... karthik chidambaram fear...Court of repatriation
Author
Tamil Nadu, First Published Jan 13, 2020, 5:44 PM IST

கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை பொருளாதாரக் குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்திலிருந்து, எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவரது மனைவி ஸ்ரீநிதி. இருவரும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ.4.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடியும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் ரூ.1.35 கோடியும் வருமான வரி கணக்கில் காட்டவில்லை.

IT department case... karthik chidambaram fear...Court of repatriation

இதையும் படிங்க;-  வெட்ட வெளியில் பூங்காவை படுக்கை அறையாக மாற்றிய காதல் ஜோடிகள்... காமக்களியாட்டம் போடும் இளசுகள்..!

அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து இருவரும் நேரில் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தது. 

IT department case... karthik chidambaram fear...Court of repatriation

இதையும் படிங்க;-  மாதவிடாய் என்றும் பாராமல் மிருகத்தை விட கொடூரமாக இளம்பெண் கூட்டு பலாத்காரம்... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

இந்நிலையில், எம்.பி.யாக தான் இல்லாதபோது தொடரப்பட்ட வழக்கை, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவில் எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. 

IT department case... karthik chidambaram fear...Court of repatriation

அப்போது, கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் நிறுவத்திலிருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்திற்கு நீதிபதி அனிதா சுமந்த் வழக்கறிஞராக இருந்தபோது ஆஜராகியிருப்பதால், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும்படி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios