ishwarya dhanush pray for rajinikanth

கட்சி துவங்கும் முன் கொள்கைகளை திட்டமிடுகிறார்களோ இல்லையோ ஆனால் தமிழக அரசியல்வாதிகள் கோயில், குளமென்று அலைவதை மிக நிச்சயமாக செய்வார்கள். 

பெரியார் வழி வந்த திராவிட கட்சி தலைவர்களே இப்படி செய்யும் போது ‘ஆன்மிக அரசியல்’ செய்யப் போகிறேன் என்று விபூதி, குங்குமத்தோடு அரசியல் செய்ய வரும் ரஜினியின் கோஷ்டி கம்முன்னு கிடக்குமா? 

கெளம்பிட்டாங்கல்ல!...ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இதோ அப்பாவின் அரசியல் வெற்றி நடை போடுவதற்காக இதோ கோயில்களை வலம் வரத் துவங்கிவிட்டார். திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூர் எனுமிடத்தில் உள்ள நரசிங்கபெருமாள் கோயிலில் சமீபத்தில் தரிசனம் செய்திருக்கிறார். தென் பகுதி அரசியல்வாதிகள் அதிகமாக தரிசனம் செய்யும் கோயில் இது. இங்கு தரிசனம் செய்த ஐஸ்வர்யா அப்பா ரஜினிகாந்த் மற்றும் கணவர் தனுஷ் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு, அப்பா ஸ்டைலில் சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து தியானம் செய்துவிட்டு கிளம்பிவிட்டாராம். 

தென் தமிழகத்தின் உட்பகுதியிலிருக்கும் இந்த கோயிலைப் பற்றி ரஜினிக்கு எப்படி தெரியும்? என்று அரசியல் புள்ளிகளுக்கு வியப்புதான். 
தமிழகமெங்கும் வியாபித்திருக்கும் தனது ரசிகர் மன்றத்தினர் சொல்லியிருந்தால் கூட ரஜினிகாந்த் இப்படி தன் பிரதிநிதியாக மகளை அனுப்பி அர்ச்சனை செய்திருக்க மாட்டார். இந்த ஆலயத்துக்கு சென்று வர சொன்னது பி.ஜே.பி.யின் ஒரு முக்கிய கை என்கிறார்கள். அங்கே தான் சென்றால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாது என்பதால் தன் பிரதிநிதியை அனுப்பியிருக்கிறார் ரஜினி. 

ரஜினிக்காக அவரது மகள் வந்து தரிசனம் செய்துவிட்டு சென்றிருப்பது பற்றி வம்பளக்கும் விமர்சகர்கள் ஹூம்! அரசியல்ல ஜெயிக்கணும்னா சாமியை கும்பிட பிரதிநிதியையெல்லாம் அனுப்ப வேண்டியிருக்குது. ஒருவேளை தேர்தல்ல ஜெயிச்சு உச்சம் போயாச்சுன்னா, பினாமியை அனுப்புவாரா? என்று தெறிக்க விடுகின்றனர்.