நம்பிக்கை குப்பைகள் எவ்வளவு 'மூடத்தனமானது', 'பிற்போக்குத்தனமானது', 'மக்களை முட்டளாக்குவது' என்பதை உலகிற்கே 'விளக்கு' போட்டு காண்பித்த பிரதமருக்கு நாம் ஏன் நன்றி சொல்லக்கூடாது?

கொரோனா பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு குறைந்த நிதியும், வடமாநிலங்களுக்கு அதி நிதியும் பாஜக அரசு ஒதுக்கியுள்ளதற்கு மே-17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘’பல்லிளிக்கும் தேசபக்தி. தமிழினத்திற்கு எதிரானது மோடி அரசு என்பதற்கான உதாரணம்! ’விளக்கு’ பிடிக்க சொன்ன பிஜேபியே நெருக்கடி காலத்திலும் தமிழனை அழிப்பது தான் உம் தேசபக்தியா? தமிழன் இந்திக்காரனுக்கு அடிமையா? டில்லியின் காலனியா தமிழ்நாடு? பனியா சேட்டுகளுக்கு தாரை வார்க்கவா எம் வரிப்பணம்.

Scroll to load tweet…

'ஆரிய இந்துத்துவ பார்ப்பனிய வேதமதம்' என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நம்பிக்கை குப்பைகள் எவ்வளவு 'மூடத்தனமானது', 'பிற்போக்குத்தனமானது', 'மக்களை முட்டளாக்குவது' என்பதை உலகிற்கே 'விளக்கு' போட்டு காண்பித்த பிரதமருக்கு நாம் ஏன் நன்றி சொல்லக்கூடாது? பாசிட்டிவாக யோசிப்போமே’’ எனக் கூறியுள்ளார்.