இதனையடுத்து அந்தப் பக்கத்தை கூகுள் அகற்றியது, மேலும் நேற்று இரவு கூகிள் இந்தியா மன்னிப்பு கோரி ட்வீட் செய்தது, முதலில் கன்னடத்திலும் பின்னர் ஆங்கிலத்திலும் அந்த மன்னிப்பு கடிதம் வெளியானது.
இந்தியாவில் மிக மோசமான, அருவருப்பான மொழி என்ன என கூகுளில் தேடினால் அதற்கு கன்னடம் என பதில் கிடைத்தது, இதை எதிர்த்து கன்னட மொழி பேசும் மக்கள் ஆர்த்தெழுந்ததால் கூகுள் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.
இந்திய மொழிகளிலேயே மிக மோசமான மொழி என ஆங்கிலத்தில் சூட்டினால் அதற்கு கன்னடம் என பதில் கிடைத்தது, அதுதொடர்பான ஸ்கிரீன் சாட்டுகளை ஏராளமானோர் சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். இது கன்னட மொழி பேசும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் கூகுள் நிறுவனத்தின் இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கன்னட குயின்ஆஃப்அல்லாங்கேஸ், பாய்காட் கூகிள் போன்ற ஹேஷ்டேக்குகளை மக்களை வைரலாக்கினர்.மேலும் இது தொடர்பாக கர்நாடக மாநில கன்னட மற்றும் கலாச்சார அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது தொடர்பாக ஆராய்ந்து கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்கப்படும் என அறிவித்தார்.

சமூக வலைதளங்களிலும் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக கன்னட மக்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். “மாபெரும் விஜயநகர சாம்ராஜ்யத்தின் தாயகம், # கன்னட மொழியில் வளமான பாரம்பரியம், புகழ்பெற்ற மரபு மற்றும் தனித்துவமான கலாச்சாரம் கன்னடத்திற்கு உண்டு. உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான கன்னடத்தில் 14 ஆம் நூற்றாண்டில் ஜெஃப்ரி சாசர் பிறப்பதற்கு முன்பே காவியங்களை எழுதிய சிறந்த அறிஞர்கள் இருந்தனர். “கூகிள் இந்தியா மன்னிப்பு கேளுங்கள்” என்று பெங்களூரு மத்திய எம்.பி. பி.சி. மோகன் ட்வீட் செய்தார். மேலும், முன்னாள் முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி, தொடர்ச்சியான ட்வீட்டுகளில், ஒரு குறிப்பிட்ட மொழிக்கு எதிரான வெறுப்பை கூகிள் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். எந்தவொரு மொழியையும் இவ்வாறு சொல்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று எச்சரித்தார்.

இதனையடுத்து அந்தப் பக்கத்தை கூகுள் அகற்றியது, மேலும் நேற்று இரவு கூகிள் இந்தியா மன்னிப்பு கோரி ட்வீட் செய்தது, முதலில் கன்னடத்திலும் பின்னர் ஆங்கிலத்திலும் அந்த மன்னிப்பு கடிதம் வெளியானது. “தேடல் எப்போதும் சரியானதல்ல. சில நேரங்களில், இணையத்தில் உள்ளடக்கம் விவரிக்கப்படும் விதம் குறிப்பிட்ட கேள்விகளுக்கு ஆச்சரியமான முடிவுகளைத் தரும். இது சரியானதல்ல என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் ஒரு சிக்கலைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, எங்கள் வழிமுறைகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றும்போது நிச்சயம் விரைவான திருத்த நடவடிக்கையை எடுப்போம். இது கூகிளின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல, மேலும் தவறான புரிதலுக்கும் எந்தவொரு உணர்வையும் புண்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், ”என்று அது கூறியது. இதற்கு ட்விட்டருக்கு ரீடுவிட் செய்த பலர், இது கன்னடிகாஸின் ஒற்றுமையின் வெற்றி, என்றனர், சிலர் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளவதாக கூறினர். பலர் கூகிள் நடைமுறைகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினர்.
