கடந்த நான்கு ஆண்டுகளில் தென்னிந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 380 கோடி மட்டுமே என்ற அவர், மொத்தத்தில் லாபத்தில் இயங்கும்  ரயில்களை  தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசு லாபம் இல்லாத ரயில்களை மட்டும் இயக்குகிறது என குற்றம் சாட்டினார். 

எதற்கெடுத்தாலும் ஒரே நாடு என பேசும் மத்திய அரசு தெற்கு ரயில்வேக்கு 59 கோடி ரூபாயும், ஆனால் வடக்கு ரயில்வேக்கு 13 ஆயிரத்து 700 கோடி நிதி ஒதுக்கி இருப்பது சரிதானா? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவையில் கேள்வி எழுப்பி உள்ளார். லாபத்தில் இயங்கும் ரயில்களை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது என்றும், நஷ்டத்தில் இயங்கும் ரயில்களை மட்டுமே அது இயக்குகிறது என்று அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

வடக்கு வளர்கிறது தெற்கு தேய்கிறது என்பது பலகாலமாக இருந்துவரும் குற்றச்சாட்டு ஆகும். வட இந்தியர்கள் வறுமையில் வாடுவதாக கூறி அம் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதும், தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற தென்மாநிலங்கள் செழிப்புடன் இருப்பதால் தென்னிந்தி யாவுக்கு நிதி ஒதுக்குவதில் இருந்து நுழுவுவதும் மத்திய அரசின் வாடிக்கை என்பதால், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற பதம் பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் தெற்கு ரயில்வேவேக் காட்டிலும் வடக்கு ரயில்வேக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: 40,000 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு? ஊடகத்தில் உளறினாரா அமைச்சர்.. கிடுக்குப்பிடி பிடிக்கும் அன்புமணி..

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். கூட்டத் தொடரின் 2வது அமர்வு நேற்றுத் தொடங்கியது. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வரை அதன் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மக்களவையில் ரயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பட்ஜெட் மீது உரை நிகழ்த்தினர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரயில்வே நிலையங்களை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல் கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக இருந்த பெட்டிகள் நீக்கப்பட்டது என்றார். அதை விரைவில் பொறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய அவர், தெற்கு ரயில்வேக்கு வெறும் 59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியள்ள மத்திய அரசு, அதே வடக்கு ரயில்வேக்கு மட்டும் 13 ஆயிரத்து 200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது, எதற்கெடுத்தாலும் " ஒன் நேஷன் " ஒரே நாடு என கூறிக்கொள்ளும் பாஜக இப்படி பாரபட்சமாக நிதி ஒதுக்குவது சரிதானா? ஒரே நாடு என பேசும் பாஜக இப்படி நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டலாமா என கேள்வி எழுப்பினார். அப்போது அவரின் பேச்சுக்கு எதிர்க் கட்சியினர் வரவேற்று ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய அவர், தென்னிந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட வட இந்திய ரயில்வேக்கு கொடுக்கப்பட்டுள்ள நிதி பன்மடங்கு அதிகமாக உள்ளது என்றார்.

இதையும் படியுங்கள்: ஹிஜாப் எங்கள் உரிமை: ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட வலிமையான போராட்டம் வெடிக்கும்.. நியு கல்லூரி மாணவர்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தென்னிந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 380 கோடி மட்டுமே என்ற அவர், மொத்தத்தில் லாபத்தில் இயங்கும் ரயில்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசு லாபம் இல்லாத ரயில்களை மட்டும் இயக்குகிறது என குற்றம் சாட்டினார். அதேபோல் ரயில்வே துறையை பொறுத்த வரையில் தென்னிந்தியர்களுக்கு அதில் வேலைவாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படுகிறது, மொழி தெரியாத பணியாளர்களால் மக்களின் உயிருக்கே பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது என்றும் மக்களவையில் கனிமொழி குற்றம்சாட்டினார்.