நடிகை குஷ்புவின் கண்ணில் கத்தி குத்தி காயம் ஏற்பட்டுள்ளதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இன்றைய அரசியல் களத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர் நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஹாய் நண்பர்களே... இன்று காலை இன்னும் கொஞ்சம் கத்தி கீழே இறங்கி இருந்தால் எனக்கு பார்வை போயிருக்கும். நிச்சயமாக விரைவில் குணமாகி வருவேன். கவனமாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த காயம் எந்த சூழலில், எப்படி நடைபெற்றது என்பதை பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை. குஷ்பு விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிராத்திப்பதாக கூறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.