Asianet News TamilAsianet News Tamil

ஓமந்தூரார் மருத்துவமனையை தலைமை செயலகமாக மாற்றுவதில் உறுதியாக உள்ளதா அரசு.. மா.சு கொடுத்த விளக்கம்.

தேர்தல் அறிக்கையில் கூறியதன் அடிப்படையில்தான் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Is the government committed to turning Omanthurar Hospital into a General Secretariat?
Author
Chennai, First Published Jun 11, 2021, 12:23 PM IST

தேர்தல் அறிக்கையில் கூறியதன் அடிப்படையில்தான் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோக மற்றும் இயற்கை மருத்துவ பிரிவில் சிறிது நேரம் யோகா பயிற்சியில் ஈடுபட்டு மருத்துவர்களின் கைதட்டலை பெற்றார். 

Is the government committed to turning Omanthurar Hospital into a General Secretariat?

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 54 சித்தா கொரோனா சிகிச்சை மையம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மையங்கள் 11, ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் 2, யுனானி சிகிச்சை மையம் 1, ஹோமியோபதி சிகிச்சை மையம் என மொத்தம் 69 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. 27250 பேர் 69 மையங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள கட்டளை மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளும் ஊக்கப்படுத்துவது போல் பழமை வாய்ந்த சித்த மருத்துவத்தையும் மேம்படுத்தப்படும் என கூறினார்.

Is the government committed to turning Omanthurar Hospital into a General Secretariat?

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படுகிறது என ஓ.பன்னீர்செல்வம் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், தேர்தல் அறிக்கையில் கூறியது போல்தான் தென் சென்னையில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்படும் என கூறப்பட்டது அதன் அடிப்படையில்தான் கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் புதிய பன் நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்றார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சித்த மருத்துவ சிகிச்சைகள் குறித்த சந்தேகங்களை 73587 23063 என்ற எண்ணில் சித்தந் மருத்துவ கட்டளை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios