Asianet News TamilAsianet News Tamil

Maridhas case: மாரிதாஸுக்காக ஆஜராகிறாரா சுப்ரமணிய ஸ்வாமி..? வழக்கு அவ்வளவு ஸ்ட்ராங்..!

மாரிதாஸ் மோசடியாளர் என்பது ஐயமற நிரூபிக்கப்பட்டு அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படுவதால் அவரது வழக்கறிஞராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்பிரமணிய சுவாமி ஆஜராக உள்ளதாக கூறப்பட்டது.

Is Subramania Swamy appearing for Maridhas? The case is so strong ..!
Author
Tamil Nadu, First Published Dec 23, 2021, 1:41 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மாரிதாஸுக்கு எதிரான ஓர் ஆதாரத்தை, குற்றவாளியே கொடுத்திருக்கிறார் என்பதுதான் இவ்வழக்கின் சிறப்பம்சமே. போலியான ஈமெயில் ஐடியை மாரிதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களே உருவாக்கி, மக்களைக் குழப்பியிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை மாரிதாஸ் மோசடியாளர் என்பது ஐயமற நிரூபிக்கப்பட்டு அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படுவதால் அவரது வழக்கறிஞராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுப்பிரமணிய சுவாமி ஆஜராக உள்ளதாக கூறப்பட்டது.Is Subramania Swamy appearing for Maridhas? The case is so strong ..!

தொடர்ந்து திமுகவை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார் மாரிதாஸ். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தமிழக போலீஸார் யூடியூபர் மாரிதாஸை மதுரையில் கைது செய்தனர். மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தை காஷ்மீருடன் ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய ட்வீட் செய்திருந்தார். சிறிது நேரத்தில் இந்த ட்வீட்டை அவர் நீக்கினார். ஆனால், அந்த ட்வீட் தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது வன்முறையைத் தூண்டியதாகவும், சமூக அமைதியின்மையைத் தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் மாரிதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ் மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எனினும் தனியார் தொலைக்காட்சி ஒன்று வழங்கிய போலி மின்னஞ்சல் தொடர்பில் மாரிதாஸும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 27ம் தேதி வரை  மாரிதாஸை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வரும் மாரிதாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் புகார் அளித்தார்.Is Subramania Swamy appearing for Maridhas? The case is so strong ..!

இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாரிதாஸ் கைதுக்கு பா.ஜ.க ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாரிதாஸை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்ற போது, ​மதுரை மாவட்ட பாஜக தலைவர்​சரவணன் தலைமையிலான பா.ஜ.,வினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் மாரிதாஸ் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். “திமுக ஐடி நிர்வாகிகள், நிர்வாகிகள், திராவிட கழகத்தினர் என்ன சொன்னார்கள் தெரியுமா? பிபின் ராவத் மரணம் குறித்து பல பொய்யான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். கருத்து தெரிவிக்கும் போது, அவர்கள் தேவையில்லாமல் அதை ஒரு பிரச்சினையாக ஆக்குகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.Is Subramania Swamy appearing for Maridhas? The case is so strong ..!

இதனிடையே, இந்த வழக்கில் மாரிதாஸ் தரப்பில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சுப்பிரமணிய சுவாமி ஆஜராவதாக தகவல் சமூக வலைதளங்களில் உலா வந்தது. இதற்கு இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருவது வைரலாகி வருகிறது. இதற்கு பதிலளித்த சுப்பிரமணிய சுவாமி, இது பொய்யான தகவல் என்றும், இதில் உண்மையில்லை என்றும் கூறினார். சுப்ரமணிய சுவாமியின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios