Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவுடன் இணைய இருக்கிறாரா ஓ.பி.எஸ்..? சமாளிக்கும் அமைச்சர் செல்லூர் ராஜூ..!

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பிரச்சினை எதுவும் இல்லை. இரட்டைக்குழல் துப்பாக்கி போல அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  தெரிவித்துள்ளார். 

Is OPS online with Sasikala? Coordinating Minister Cellur Raju ..!
Author
Tamil Nadu, First Published May 29, 2021, 12:21 PM IST


ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பிரச்சினை எதுவும் இல்லை. இரட்டைக்குழல் துப்பாக்கி போல அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  தெரிவித்துள்ளார். 

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே பல ஆண்டுகளாக அரசியல் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதில் புதிய திருப்பமாக இருவரும் கடந்த சில வாரங்களாக தனித்தனி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.Is OPS online with Sasikala? Coordinating Minister Cellur Raju ..!

இதற்கிடையில், மே மாதம் சென்னை ஜே.ஜே.நகரில் அம்மா உணவகம் ஒன்று திமுகவினர் சிலரால் அடித்து நொறுக்கப்பட்டது பேசுபொருளானது. அப்போது, ஓபிஎஸ் ஒரு தனிப்பட்ட அறிக்கையை வெளியிட்டார். அதில் ​​சென்னை ஜே.ஜே.நகரில் அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது, இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறினார்.

பின்னர், மே 5ஆம் தேதி அன்று அம்மா உணவகம் மீதான தாக்குதலை கண்டித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருந்தனர். பின்னர் மே 6ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின், ​சட்டப்பேரவையில் அடுத்த எதிர்கட்சித் தலைவர் ஓபிஎஸ்ஸா? ஈபிஎஸ்ஸா? என்ற பேச்சு எழுந்தது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து முடிவு செய்ய இரண்டு முறை அதிமுக கூட்டம் நடத்தி விவாதங்கள், இழுபறிக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இது பன்னீர்செல்வத்திற்கு சற்று பின்னடைவாக அமைந்தது.Is OPS online with Sasikala? Coordinating Minister Cellur Raju ..!

நீண்ட இழுபறிக்கு பின் எதிர்க்கட்சித் தலைவரான பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார், அதில் தமிழக மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் கூடுதலாக வழங்கவும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசிகளை அதிகளவில் வழங்கவும் வலியுறுத்தினார். தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சனைகளையும் விரைந்து தீர்க்க கோரி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். அதில், தமிழகத்தில் தற்போது பரவிக்கொண்டிருக்கும் கருப்பு பூஞ்சை நோயை உடனடியாக கட்டுப்படுத்தவும், மாநிலத்திற்கு போதுமான கொரோனா தடுப்பூசிகளை உறுதி செய்யவும் அறிக்கையில் கூறியிருந்தார்.

இதற்கிடையே, மே 25 அன்று, முதல்வர் பழனிசாமி விடுத்த தனிப்பட்ட அறிக்கையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகளை அதிகரிக்க மாநில அரசை வலியுறுத்தினார். மேலும், மாநிலத்தில் கொரோனா இறப்புகளைக் குறைப்பதற்கான வழிகளை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார். முதலில், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பன்னீர்செல்வம் தயக்கம் காட்டினார். அவருக்கு அழுத்தம் தரப்பட்டு அறிவிக்க வைத்தனர். இது ஓபிஎஸ்ஸுக்கான முதல் பின்னடைவு ஆகும். பின்னர் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்போது பழனிசாமி, பன்னீர்செல்வத்திற்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து பல கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த ஓபிஎஸ், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு பதவியை விட்டுத்தர மனமில்லை.

Is OPS online with Sasikala? Coordinating Minister Cellur Raju ..!

ஓபிஎஸ் முன் இருந்த அந்த கடைசி வாய்ப்பும் நழுவியது. இனியும் அமைதியாக தொடர முடியாது என்பதை உணர்ந்த ஓபிஎஸ் அறிக்கைகள் விடத் தொடங்கினார். எதிர்க்கட்சித் தலைவராக ஈபிஎஸ் பதவியேற்ற பின், ரெம்டெசிவர் மருந்தின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரசை வலியுறுத்தி தனது முதல் தனிப்பட்ட அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டார். தனிப்பட்ட அறிக்கையை வெளியிடுவது கட்சி விதிமுறைகளை மீறும் செயலாகும். இருப்பினும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனும் சக்திவாய்ந்த பதவியில் இருக்கிறார் ஓபிஎஸ் . பன்னீர்செல்வத்தை மீறி கட்சியில் எதுவும் நடக்காது. எதிர்க்கட்சித் தலைவராக ஈபிஎஸ் பதவியேற்ற பின் தனிப்பட்ட அறிக்கையை வெளியிட்டதால், தனது சுய பாதுகாப்பிற்காக ஓபிஎஸ்ஸும் தனிப்பட்ட அறிக்கைகளை வெளியிட தொடங்கினார்.

இருவரின் செயலும் அவர்கள் போட்ட ஒப்பந்தத்தின்படி விதிமீறல்தான். இது அதிமுக கட்சிக்கு நல்லதல்ல. இந்த செயல்கள் ஒற்றைத் தலைமையை நோக்கிச் சென்றால், ஈபிஎஸ் தானே அந்த ஒற்றைத் தலைமையை ஏற்க நினைக்கிறார் என்பதே உண்மை. அதேசமயம், அவ்வாறு நடக்க விட்டுவிடக் கூடாது என ஓபிஎஸ் சசிகலாவை சட்டப்பூர்வமாக கட்சிக்குள் கொண்டுவருவதற்கான செயல்களில் ஈடுபடுவார்.

Is OPS online with Sasikala? Coordinating Minister Cellur Raju ..!

ஆட்சியில் இருக்கும் வரை ஈபிஎஸ்ஸுக்கு இருந்த அதிகாரம், ஆட்சியை கைப்பற்ற தவறிய பின்னர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்ய இருமுறை கூட்டத்தை கூட்ட வேண்டியதாக அமைந்தது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்ஸுக்கு இடையிலான அதிகார மோதலில் தனக்கு முன் இருந்த கடைசி வாய்ப்பும் கையை விட்டு நழுவி விட்டது என்ற அதிருப்தியில் சசிகலாவை நோக்கி ஓபிஎஸ் நகர்கிறார். எனவே, கட்சியின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமியா அல்லது சசிகலா பின்னணியில் ஓ.பன்னீர்செல்வமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அதிமுகவில் உட்கட்சி பூசல் இருப்பது உண்மை. ஒருவரையொருவர் தோற்கடிக்க நினைக்கும் அளவிற்கு கட்சிக்குள் உட்கட்சி பூசல் நிலவுகிறது. கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க எதிரணியினரோடு மறைமுகமாக கைகோர்க்கும் அளவிற்கு சென்றது.


 

Follow Us:
Download App:
  • android
  • ios