Asianet News TamilAsianet News Tamil

உயிரை கொடுத்து மருத்துவர்கள் போராடும் நேரத்தில் இது தேவை இல்லாத ஒன்று... ஸ்டாலின் விளாசல்..!

கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு நீட் தேர் தேவைதானா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Is it the right time to hold NEET exams for postgraduate courses? mk stalin
Author
Tamil Nadu, First Published Apr 15, 2021, 2:27 PM IST

கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு நீட் தேர் தேவைதானா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் ஒரு லட்சம் இருந்து வந்த பாதிப்பு திடீரென 2 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டு என ராமதாஸ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி  வந்தனர். 

Is it the right time to hold NEET exams for postgraduate courses? mk stalin

இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உயர் அதிகாரிகள் ஆகியோர் நேற்று சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.  இந்த ஆலோசனைக்குப் பின் மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 4-ம் தேதி முதல் ஜூன் மாதம் வரை நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்க இருந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சமயத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு நீட் தேர்வை நடத்துவது சரியானதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Is it the right time to hold NEET exams for postgraduate courses? mk stalin

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மருத்துவர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த நேரத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு நீட் தேர்வை நடத்துவது சரியானதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios