ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும் எனக் கூறிக் கொள்ளும்போது நான் எதற்காக அப்படி கூறக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் சமீபத்தில் கூறியிருந்தார். 

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணியிலிருக்கும் திமுக, சுவர் விளம்பரமாக தீட்டப்பட்டிருக்கும் திருமாவளவன் பெயரை வெள்ளை பெயிண்ட் கொண்டு அழிக்கும் காட்சி என சமூக வலைதளத்தில் சுற்றி வருகிறது. அதில் பேசும் ஒருவர், திமுகவினர் ஏவலின் பேரில் தான் பெயிண்ட் வைத்து திருமாவளவன் பெயர் அழிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் சாதி வன்மத்துடன் செயல்படுகிறார். இப்படிப்பட்ட திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி தொடர வேண்டுமா? 

இந்த திமுக கூட்டணிக்கு வாக்களிக்கிற சூடு சொரணையற்ற விடுதலை சிறுத்தைகள் வாக்காளர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதுதான் திமுகவின் முகம்’’என அவர் தெரிவித்துள்ளார்.