is it bribe to god balaji when putting money in tirupathi hundi condemn by h raja to sa chandrasekar

ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கை லஞ்சமா? என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு, பாஜக தேசிய செயலர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்து உள்ளார். 

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விசிறி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது திருப்பதி உண்டியலை லஞ்சம் பெறும் உண்டியல் என கூறினாராம். 

அவரது இந்தப் பேச்சுக்கு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரசிகர் மன்றம் கலைப்போம், இந்துவாக இணைவோம் எனக் கூறியுள்ள எச்.ராஜா, தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளது...

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இன்று தனக்கு ஜாதி இல்லை மதம் இல்லை நாங்கள் தமிழர்கள் மனிதர்கள் என்கிற கிறித்தவ மதமாற்றும் சக்திகளின் கோரமுகம் இதோ. நாம் ஏழுமலையானுக்கு செலுத்தும் காணிக்கை லஞ்சமாம். இந்துக்களே இனியும் நாம் ஏமாறப் போகிறோமா?ரசிகர் மன்றம் கலைப்போம் இந்துவாக இணைவோம்.


Scroll to load tweet…