is dinakaran starts new party
தினகரன் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக முதல்வர் பழனிசாமி அணி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் கூறிய கருத்தை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் ம றுத்துள்ளார்.
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் யாரும் தினகரனுக்கு ஆதரவாக இல்லை என்பதால் அந்த நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை தினகரன் நியமித்தார். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளால் ஒதுக்கப்பட்டவர்தான் தினகரன் என்பது இதிலிருந்தே தெரிகிறது. அவரது ஆதரவாளர்களை வைத்து தனியாக இயங்கிவரும் தினகரன், தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என அனைத்து நிர்வாகிகளும் ஒன்றரை கோடி தொண்டர்களும் உள்ள கட்சியை விடுத்து தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
