யுத்தம் நடக்கும்போது பிரபாகரனோடு இருந்திருந்தால் திருமா மேலோகம் போயிருப்பனு ராஜபக்சே கூறினார். ராஜபக்சே ஒரு ஃப்ரண்ட்லியா, நகைச்சுவையா தானே சொன்னார்

ராஜபக்சே என்னை கொல்வேன் என்று சொன்னதை நகைசுவையாக எடுத்து கொண்டேன் என திருமாவளவன் கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

’’யுத்தம் நடக்கும்போது பிரபாகரனோடு இருந்திருந்தால் திருமா மேலோகம் போயிருப்பனு ராஜபக்சே கூறினார். ராஜபக்சே ஒரு ஃப்ரண்ட்லியா, நகைச்சுவையா தானே சொன்னார்’’ எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

இலங்கையில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் 'புதிய வீடுகள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக ரஜினிகாந்த் இலங்கை செல்லவிருக்கிறார்' என்ற செய்திகள் கசியத் தொடங்கியதுமே, 'ரஜினி இலங்கைக்குப் போகக்கூடாது' என்ற முதல் எதிர்ப்புக் கோரிக்கையை வைத்தவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். ஆனால் அடுத்து அவரே இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Scroll to load tweet…

அங்கு சென்று திரும்பிய அவர், ’’ராஜபக்‌ஷேவுடன் ஏன் கைகொடுத்தீர்கள்? அவர்கள் கமென்ட் அடிக்கும்போது ஏன் சிரித்தீர்கள்? என்றெல்லாம் என்னைக் கேள்வி கேட்கிறார்கள். அவை நாகரீகம் என்ற ஒன்று இருக்கிறது. எவ்வளவுதான் நமக்கு உள்ளுக்குள் கோபம் இருந்தாலும், அவை நாகரீகத்தை மீறி எதுவும் செய்துவிட முடியாது. அப்போதும்கூட, 'இவர் பிரபாகரனின் ஆள். பிரபாகரன் இருந்தபோது இவர் வந்திருந்தால், இவரும் மேலோகம் போயிருப்பார்' என்றுதான் என்னை கமென்ட் அடித்தார் ராஜபக்‌ஷே. அந்த இடத்தில், 'எப்படிடா என்னை நீ இப்படிச் சொல்லமுடியும்?' என்று நான் சண்டைக்கா போகமுடியும்? இதுமட்டுமல்ல... வெளிவிவகாரத்துறை அமைச்சர் எங்களுக்கு ஆளுக்கு ஒரு டீத்தூள் பொட்டலத்தைப் பரிசாகத் தந்தார்’’ எனக் கூறினார்.

Scroll to load tweet…

அவர் அளித்த பதிலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு ட்விட்டர் பக்கத்தில், #ஈனப்பய_திருமா என்கிற ஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Scroll to load tweet…