Asianet News TamilAsianet News Tamil

முதல்முறையாக சிறைக்கு செல்லும் ப.சிதம்பரம்... நொறுங்கி போன குடும்பத்தினர்..!

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ப.சிதம்பரம் குடும்பத்தினர் நொறுங்கி போயினர். 

INX Media case... Chidambaram Sent to Tihar Jail For 14 Days as Court Orders
Author
Tamil Nadu, First Published Sep 5, 2019, 6:18 PM IST

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ப.சிதம்பரம் குடும்பத்தினர் நொறுங்கி போயினர். 

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 2007-ம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்தறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. INX Media case... Chidambaram Sent to Tihar Jail For 14 Days as Court Orders

இந்நிலையில் கடந்த மாதம் 20-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 5 முறையென மொத்தம் 15 நாட்கள் சிபிஐ காவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, சிபிஐ காவல் நிறைவடைந்து 6-வது முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். INX Media case... Chidambaram Sent to Tihar Jail For 14 Days as Court Orders

அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கூடாது. ஆதாரத்தை கலைத்துவிடுவார் என்ற குற்றச்சாட்டிற்கு சிபிஐ ஆதாரத்தை சமர்ப்பிக்கவில்லை. சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என வாதிட்டார். மேலும், அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் சரண் அடைய தயாராக உள்ளார். வேண்டும் என்றால், சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்யட்டும் என்று கபில் சிபல் கூறினார். INX Media case... Chidambaram Sent to Tihar Jail For 14 Days as Court Orders

ஆனால், ப.சிதம்பரத்தின் கோரிக்கை அனைத்தையும் நீதிபதி நிராகரித்துவிட்டு 19 நாட்கள் வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios