Asianet News TamilAsianet News Tamil

பணம், பதவி மட்டும் தான் தற்போதைய அதிமுகவின் நிலைப்பாடு; டிடிவி தினகரன் விமர்சனம்

சனாதனம் தொடர்பாக அதிமுகவுக்கு எந்த நிலைப்பாடும் கிடையாது. பணம், பதவி மட்டும் தான் அதிமுகவின் தற்போதைய நிலைப்பாடு என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

investigation officers may close to accused on kodanad murder case says ttv dhinakaran vel
Author
First Published Sep 15, 2023, 5:06 PM IST | Last Updated Sep 15, 2023, 5:06 PM IST

கும்பகோணத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீரை தராத நிலையில், தண்ணீரை பெற்று தர வேண்டும். அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற நிலையில், பெண் அர்ச்சகராகி இருப்பது வரவேற்கத்தக்கது.

கொடநாடு  விஷயத்தில் உண்மை குற்றவாளிகளை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும். உண்மை குற்றவாளிகளை காவல்துறை நெருங்கி விட்டதாக தெரிகிறது. சனாதனம் குறித்த அண்ணா திமுகவின் நிலை தெரிவிக்காதது குறித்த கேள்விக்கு, அதிமுகவிற்கு நிலைப்பாடு என்பது கிடையாது, பதவி, பணம் என்பது தான் நிலைப்பாடு. திமுக பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக கூறுகிறது. ஆனால் 90% சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த அரசு தயாராக இல்லை.

விலை உயர்ந்தாலும் தனியாரை விட கம்மி தான்; ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அமைச்சர் விளக்கம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்  ஹிட்லர் போல் செயல்பட்டு வருகிறார். சனாதனத்தை உதயநிதி ஸ்டாலினை பேச வைத்து தமிழகத்தில் நிலவுகின்ற  மக்கள் விரோத ஆட்சியை நோக்கி வரும் குற்றச்சாட்டுகளை மாற்றுவதற்கு சகோதர தினத்தை பற்றி பேசிவருகின்றனர். அந்த காலத்தில் இருந்த முறைகளைப் பற்றி இந்த காலத்தில் கூறுவதில் என்ன நியாயம் உள்ளது. இப்போது எல்லோரும் சமம் என்ற நிலைக்கு வந்துள்ளோம்.

விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சீல்; இந்து அமைப்பினர் வாக்குவாதம்

 கர்நாடக முதல்வர் பதவியேற்ற போது நேரில் சென்று வாழ்த்து சொன்ன ஸ்டாலின், தற்போது தண்ணீர் பெறுவதற்கு சோனியா காந்தி இடம் பேசி தண்ணீர் பெற வேண்டும் என்றார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி  குறித்த நிலைப்பாட்டை, நவம்பர், டிசம்பரில் எடுப்போம். எடப்பாடி பழனிச்சாமி உள்ள அணியில் கூட்டணியில் இருக்க வேண்டுமா. என்பது குறித்து ஆலோசனை நடத்துவதாகவும். அந்த அணியில் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாடு பற்றி பேசி வருவதாகவும் கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios