Intertnational yoga day daradoon prime minister modi

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தககாண்ட் மாநிலம் டேராடூன் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 55 ஆயிரம் பேருடன் பிரதமர் மோடி பங்கேற்று யோகா பயிற்சிகளை செய்தார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் யோகா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 21-ம் தேதி, சர்வதேச யோகா தினமாக, 2015ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி, நாடு முழுவதும், 5,000 இடங்களில், சிறப்பு யோகா நிகழ்ச்சிகளுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடுசெய்துள்ளது.

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில், 55 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில், பல்வேறு விதமான ஆசனங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கங்கை நதி பாயும் இடத்தில் யோகா செய்வது பெரும் பாக்கியம் என தெரிவித்தார்..

இன்று சூரியன் உதிக்கும் இடமெல்லாம் யோகா நடைபெறுகிறது. இதற்காக இந்தியா பெருமை கொள்கிறது. நாள்தோறும் யோகா செய்து சூரியனை வரவேற்போம். டேராடூன் முதல் டப்ளின் வரை, ஷாங்காய் முதல் சிகாகோ வரை எங்கு பார்த்தாலும் இன்று யோகா தான் என பெருமிதம் தெரிவித்தார்..

யோகா மூலம் புதிய அனுபவம் கிடைக்கிறது. அவசர அவசரமாக பணிக்கு செல்பவர்களும் தினமும் யோகா செய்வது அவசியம் என தெரிவித்த மோடி யோகா செய்தவதால் உடல், மனம், ஆன்மாவை அமைதிப்படுத்தலாம் என தெரிவித்தார்.

யோகாவால் மன அமைதி கிடைக்கும்; எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். மனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா. என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதே போல் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களிலும், அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.