international human rights commission presents Award best woman

2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பாஜக மாநில தலைவர் தமிழிசைக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் நேற்று வழங்கியுள்ளது.

2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இன்று வழங்கியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத பெண் ஆளுமையாக உருவெடுத்து வருகிறார். மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வரும் தமிழிசை தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற கோஷத்தை முன் வைத்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னையில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் விழா இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், 2017-ம் ஆண்டு சிறப்பாக அரசியல் மற்றும் பொதுநலச் சேவைகள் பணியாற்றிதாக, தமிழக மாநில பாரதிய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜானுக்கு சிறந்த பெண் அரசியல்வாதி என்ற விருதை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் வழங்கியது.

விருதுபெற்ற தமிழிசை சவுந்தரராஜானுக்கு கட்சி தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.