Intelligent intelligence! Deprecated financial lock! The poster without mon

மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையின் தீவிர நெருக்கடியால் நாம் தமிழர் கட்சியின் நிதி ஆதாரங்கள் கிட்டத்தட்ட முடக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரம், துப்பாக்கிச் சூடு போன்றவற்றை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளை காவல்துறை மட்டும் அல்ல உளவுத்துறையும் தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியது. கலவரத்திற்கு காரணமான தூத்துக்குடி போராட்டத்தை வழிநடத்தியதே நாம் தமிழர் கட்சியினர் தான் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சீமானை கைது செய்ய முயற்சிகள் நடைபெற்றன. பின்னர் சென்னையில் ஐ.பி.எல் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் தாக்கப்பட்ட வழக்கில் சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை முயற்சி வழக்கில் இருந்து சீமான் ஜாமீன் பெற்றார். ஆனால் அதன் பிறகு திருச்சியில் நாம் தமிழர் – ம.தி.மு.க.வினர் மோதலை தொடர்ந்து சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தற்போது நிபந்தனை ஜாமீனில் சீமான் மதுரையில் தங்கி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வருகிறார். இதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் களப்பணியாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சிக்கு எந்தெந்த வழிகளில் நிதி வருகிறது, அவர்களின் தினசரி செலவுக்கு பணம் எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்பதை எல்லாம் உளவுத்துறை கண்காணிக்க ஆரம்பித்தது. மேலும் அவர்களுக்கான நிதி ஆதாரத்தையும் மத்திய உளவுத்துறையின் மூலமாக மாநில உளவுத்துறை முடக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை மைய நிர்வாகிகள் அன்றாட செலவுக்கு கூட பணத்தை எடுக்க முடியாமல் தவிப்பதாக சொல்லப்படுகிறது.மேலும் தலைவர்களின் பிறந்த நாளன்று நாம் தமிழர் கட்சி சார்பில் வீரவணக்கம் செலுத்தி அடிக்கப்படும் போஸ்டர்களை அடிக்க கூட தற்போது நாம் தமிழர் கட்சியினரால் காசை எடுத்து செலவழிக்க முடியாத நிலை உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு நாம் தமிழர் கட்சியின் நிதிச் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் வருடா வருடம் தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் பிறந்த நாளுக்கு சென்னையில் அடித்து ஒட்டும் போஸ்டர்களை இந்த ஆண்டு சீமான் கட்சியினரால் அடித்து ஒட்ட முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.