Asianet News TamilAsianet News Tamil

அழகிரிக்கு கூட்டத்தை சேர்க்கும் அதிமுக... அமைச்சர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்! பின்னணி என்ன?

சமீபத்திய அரசியல் செய்திகளில் அதிகம் இடம் பிடித்திருப்பது அழகிரியின் பெயர் தான். அடுத்தடுத்து அழகிரி என்ன செய்கிறார் என அறிய தமிழகத்தில் இருக்கும் பல அரசியல் கட்சிகளும் ஆர்வமுடன் காத்திருக்கின்றன

Intelligence Watch every single movement
Author
Chennai, First Published Aug 18, 2018, 1:14 PM IST

சமீபத்திய அரசியல் செய்திகளில் அதிகம் இடம் பிடித்திருப்பது அழகிரியின் பெயர் தான். அடுத்தடுத்து அழகிரி என்ன செய்கிறார் என அறிய தமிழகத்தில் இருக்கும் பல அரசியல் கட்சிகளும் ஆர்வமுடன் காத்திருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் அவர் திமுக உடையும் என்று கூறியதும் தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளும் தான்.

அரசியல் வாரிசு இல்லாததால் அதிமுகவிற்கு ஏற்பட்ட நிலை  திமுகவிற்கு ஏற்பட வாய்ப்பில்லை என்பதே பெரும்பாலானோரின் கணிப்பாக இருந்தது. அதே சமயம் திமுகவில் கட்சி பிளவு என்று ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் அது அழகிரியின் மூலமாக வேண்டுமானால் நடக்கலாம் என்று ஒரு எண்ணமும் அரசியல் அறிவுஜீவிகளின் மத்தியில் இருந்தது. இப்போது அந்த எண்ணம் தான் நிறைவேறி இருக்கிறது.

Intelligence Watch every single movement

ஏற்கனவே கலைஞர் உயிருடன் இருக்கும் போதே ஸ்டாலினை தான் செயல் தலைவர் என அறிவித்து, அதன் மூலம் தன் அரசியல் வாரிசு யார் என்பதை தொண்டர்களுக்கு கூறிவிட்டதால். பெரும்பாலான தொண்டர்களும் திமுகவின் தலைவர்களும் ஸ்டாலின் பக்கம் தான் இருக்கின்றனர். ஆனாலும் அழகிரிக்கு என்றும் ஆதரவாளர்கள் இருக்க தான் செய்கின்றனர். அது எந்த அளவிற்கு என்பது அவர் செப்டம்பர் 5அன்று நடத்த உள்ள இரங்கல் ஊர்வலத்தின் போது தான் தெரியவரும்.

இதற்கிடையே அழகிரி இப்படி தனியொரு பாதை அமைத்து துணிகரமாக செயல்பட பட அவருக்கு பின்னால் இருந்து தூண்டிவிடுவது பாஜக தான் என்று திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அதிமுக தரப்பிலும் அழகிரிக்கு ஆதரவு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அழகிரிக்கு கட்சி மீது ஏற்கனவே இருக்கும் கோபத்தையும், அவர் தனிக்கட்சி தொடங்கி தன்னுடைய பலத்தை நிரூபிக்க போட்டுக்கொண்டிருக்கும் திட்டங்களையும் பார்த்துவிட்டு அதிமுக தரப்பில் ஒரு வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறதாம். 
அதன் படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உளவுத்துறைக்கு பின்வருமாறு கட்டளை அளித்திருக்கிறாரா. “அழகிரியின் ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் வாட்ச் பண்ணுங்க. அவரோட ஆதரவாளர்கள் யாரெல்லாம் இருக்காங்க... யாரையெல்லாம் அவரு சந்திக்கிறாரு என்ற முழு விவரங்களும் எனக்கு உடனுக்குடன் வரணும்..' என்பது தான் அந்த கட்டளையாம்.

அழகிரி விஷயத்தை குறித்து சில முக்கிய அமைச்சர்களிடமும் ரகசியமாக ஆலோசனை நடத்தி இருக்கும் எடப்பாடி அழகிரிக்கு அதிமுக தரப்பில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தெரிவித்திருக்கிறாராம். 

Intelligence Watch every single movement

இது நாள் வரை நடைபெற்று வந்த அரசியல் என்பது வேறு ஆனால் இனிமேல் நடக்கப்போகும் அரசியல் என்பது வேறு. இது நாள் வரை நடந்த எல்லா விஷயங்களுக்கும் அமைதியாக போய்க்கொண்டிருந்த ஸ்டாலின் இனி தான் தன்னுடைய ஆட்டத்தை தொடங்க போகிறார். இதில் மெரினாவில் இடம் கொடுக்காத பிரச்சனை  வேறு பூதாகரமாகி இருக்கிறது. செயற்குழுவில் கூட குறிப்பிட்டு இதை குறித்து பேசி இருப்பதால். இதற்கு பழிவாங்கும் விதமாக ஸ்டாலின் என்ன வேண்டுமானாலும் செய்ய வாய்ப்பிருக்கிறது.

இதனால் இனி திமுக தரப்பில் எடுக்கப்படும் ஒவ்வொரு அடியும் நமக்கு எதிரானதாக இருக்க தான் வாய்ப்பு அதிகம். அதனால் நாம அழகிரி உருவாக்கி இருக்கும் இந்த சூழலை நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

அம்மாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவில் நிலவிய சூழல் இப்போது திமுகவில் நிலவுகிறது. இதனால் அழகிரிக்கு செய்யும் உதவி திமுகவை பிரிக்க உதவும். என்ன தான் அழகிரி திமுகவில் இல்லைனாலும் அவருக்குனு திமுகவில் ஒரு செல்வாக்கு இருக்கு. மதுரை பக்கம் வேறு அவருக்கு தான் செல்வாக்கு அதிகம். அதுமட்டுமல்ல கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையிலும் அழகிரிக்கு தான் செல்வாக்கு அதிகம். அந்த செல்வாக்கை அவர் இப்பவே பயன்படுத்த ஆரம்பிச்சிட்டார். 

தன்னோட ஆதரவாளர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டும் வேலையில் அழகிரி இப்போ இருக்குறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் நம்ம அதிமுக நிர்வாகிகளுக்கு அங்கே இருக்கும் திமுகவில் யார் ஸ்டாலின் ஆதரவாளர்கள், யார் ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் என்பது தெரியும். அப்படி ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் எல்லோரும் அழகிரியை பார்க்கப் போவாங்களா என்பது தெரியாது. போக வைக்க வேண்டிய வேலையை நாம தான் செய்யனும்.

Intelligence Watch every single movement

இப்படி செய்து அழகிரி தனிக்கட்சி ஆரம்பித்தால் கூட நமக்கு பெரிய போட்டியாகலாம் அவரால ஆக முடியாது. எப்படி தீபா ஆரம்பித்த கட்சி முதலில் ஆதரவாளர்கள்னு சிலர பிரிச்சுதோ அது மாதிரி தான் அழகிரி கட்சியும் இருக்கும்.  ஆனா இந்த பிரச்சனைல ஸ்டாலின் மூழ்கிட்டார்னா, நம்ம விஷயத்துடல அதிகம் தலையிட மாட்டார். 

அதனால் அழகிரிக்கு தேவையான உதவிகளை நாம மறைமுகமா செய்தாகனும் அதற்கான வேலைகளை இப்பவே துவங்குங்க என தெரிவித்திருக்கிறாராம் எடப்பாடி.  தொடர்ந்து அழகிரிக்கு என்ன தேவை என்பதை கழுகுப்பார்வையுடன் நோட்டமிட்டு வருகின்றனராம் அதிமுகவினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios