அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற தினகரன், முதன்முறையாக வரும் 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பிக்க இருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரின் மூலம்  சட்டமன்றத்தில் நுழைய உள்ளார். எடப்பாடி – பன்னீர் அணியினர் எதிர்க்க ஆரம்பித்ததிலிருந்து  எடப்பாடி அணியில் தனது ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்றும், உரிய நேரத்தில் அவர்கள் வெளிவருவார்கள் என்றும் குறிப்பிட்டு வருகிறார்.

அதாவது சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை திமுக தரப்பு மட்டும்தான் கொண்டுவர வேண்டும் என்பதில்லை, ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதிமுக அரசின் மீது தினகரனும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரலாம். இதனால் தினகரன் சட்டமன்றத்தில் எடப்பாடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது.

தினகரன் MLA வாக பதவி ஏற்றதிலிருந்து, அதிமுக MLA க்கள் மற்றும் அமைச்சர்களை கண்காணிக்க உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் எடப்பாடி. தற்போது உளவுத்துறை சில தகவல்களை முதலமைச்சரிடம் கொடுத்ததாம். அறிக்கையை பார்த்த முதல்வர் செம டென்ஷனில் உள்ளாராம், என்னன்னா? கொங்கு பகுதியில் இரு அமைச்சர்கள், மத்திய மாவட்டத்தில் ஓர் அமைச்சர், வடமாவட்டத்திலிருந்து இரு அமைச்சர்கள் தென்மாவட்டங்களில் நான்கு அமைச்சர்கள் என 15 அமைச்சர்களும், 22 எம்.எல்.ஏ.க்களும் தினகரனுடன் தொடர்பில் இருக்கிறார்களாம். தினகரன் வார்த்தைக்கு வார்த்தை ஸ்லீப்பர் செல்ஸ்... ஸ்லீப்பர் செல்ஸ் என சொல்வது நிஜம் தானோ என குழப்பத்தில் உள்ளாராம்.

எப்போதுமே, விசேஷ தினங்களில் கட்சி தலைவர்களை, முதல்வர் என எம்.எல்.ஏ.க்கள் பலரும் வாழ்த்துத் தெரிவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது, ஆனால் நேற்று முன்தினம் புத்தாண்டு அன்று முதல்வரை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் சந்திக்கவில்லையாம் இந்த செய்தியும் எடப்படியை ஆட்டம் கானவைத்ததாம்.

இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் ஸ்லீப்பர் செல்ஸ் கொறித்து விவாதம் நடக்கும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தினகரனை ஆதரித்தால் அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் வரும்? என அந்த ஸ்லீப்பர் செல்களான 37 பேரையும் பெயர் குறிப்பிடாமல் எச்சரிப்பாராம்.