Asianet News TamilAsianet News Tamil

திமுகவிடம் தோற்றாலும் பரவாயில்லை... டி.டி.விக்கு எதிராக உளவுத்துறையை ஏவி எடப்பாடி அதிரடி வியூகம்..!

திருவாரூர் இடைத்தேர்தல் டி.டி.வி.தினகரனுக்கும்- எடப்பாடி அணிக்கும் இடையே தாழ்வா? வாழ்வா? போராட்டகளமாக தகிக்கிறது. அங்கு திமுகவிடம் தோற்றாலும் பரவாயில்லை. அமமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதற்காக எடப்பாடி அதிரடி வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் பரபரபக்கின்றன. 

intelligence Action Strategy Against ttv dhinakaran
Author
Tamil Nadu, First Published Jan 2, 2019, 1:05 PM IST

திருவாரூர் இடைத்தேர்தல் டி.டி.வி.தினகரனுக்கும்- எடப்பாடி அணிக்கும் இடையே தாழ்வா? வாழ்வா? போராட்டகளமாக தகிக்கிறது. அங்கு திமுகவிடம் தோற்றாலும் பரவாயில்லை. அமமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பதற்காக எடப்பாடி அதிரடி வியூகங்களை வகுத்து வருவதாக தகவல்கள் பரபரபக்கின்றன. intelligence Action Strategy Against ttv dhinakaran

ஏற்கெனவே திமுக வசம் இருந்த தொகுதி திருவாரூர். ஆனாலும், அங்கு அமமுக முஷ்டி தூக்கி வருவதால் கலக்கமடைந்த்து வருகிறது அதிமுக. ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அதிமுக திருவாரூரில் தினகரன் அணியை எழுச்சி பெற்று விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறது. ஆர்.கே.நகரில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதை போல திருவாரூர் தேர்தல் இருக்காது. காரணம் பலகாலமாக திமுகவுக்கு ஓட்டுப்போட்டு வந்த மக்கள் திமுகவை வெற்றிபெற வைக்காவிட்டாலும் மூன்றாமிடத்திற்கு தள்ளிவிட வாய்ப்பில்லை. ஆகையால், தினகரன் அணி தம்மை முந்தி விடக்கூடாது எனக் காய் நகர்த்த ஆரம்பித்திருக்கிறது.

 intelligence Action Strategy Against ttv dhinakaran

ஆகவே திருவாரூரில் திமுக வென்றாலும் பரவாயில்லை. தினகரனை திணறடித்தே ஆக வேண்டும் என கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இப்போது புது வியூகத்தை அமைத்துள்ளதாக கூறுகிறார்கள். கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட பகுதியிலுள்ள அமமுக கட்சியின் நகர, ஒன்றிய செயலாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்களை பற்றி கடந்த இரண்டு  கடந்த வாரம் இரு நாட்களாக உளவுத்துறை, தனிப்பிரிவு போலீசார் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அமமுக கட்சியினர் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பி வருவார்களா என்பதை ரகசியமாக நோட்டம் விட்டனர்.

intelligence Action Strategy Against ttv dhinakaran

இப்போது திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அந்தத் தொகுதியில் இருக்கும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகளை அணுகி அவர்களைப் பற்றிய தகவல்களை திரட்ட ஆரம்பித்து இருக்கிறது உளவுத்துறை. அந்த ரிப்போர்ர்ட்டை வைத்து அதிமுக அமைச்சர்கள் அவர்களை மடக்கும் திட்டத்தை கையிலெடுக்க உள்ளனர். இதன் மூலம் திருவாரூர் தேர்தல் களப்பணியாற்றும் அமமுகவினரை அழைத்து அவர்களை தங்கள் வசம் கொண்டு வரும் அசைண்மெண்ட் சில அமைச்சர்களிடம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் தினகரன் அணியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் எடப்பாடி அணி தீவிரமாக களமிறங்க உள்ளதாக கூறுகிறார்கள். இவர்களது களேபரத்தில் திமுக வெற்றிக்கனியை எளிதாக பறித்து விடும் என உற்சாகமாகிறார்கள் கழக உடன்பிறப்புகள்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios