இன்ஸ்டாகிராம் இணையதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ஐந்தாமிடத்திற்குப் பின்னுக்குத் தள்ளி நடிகர் - நடிகைகள் முந்தியுள்ளனர்

சினிமா துறையின் பிரபலங்களுக்கு தான் இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் மதிப்பு இருக்கும்.. சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான ட்ரெண்டிங் விவாதங்கள் சினிமாவை பற்றித்தான் இருக்கும்.

ஆனால் உலகத்திலேயே பெரிய கட்சி பாஜக-தான், உலகத்திலேயே ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவர் பிரதமர் மோடிதான் என்று பாஜக-வினர் அவ்வப்போது பெருமை  அடித்துக் கொள்வார்கள். இது ஊடகங்களிலும் பரபரப்பான செய்தியாகும்

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் டாப்பில் இருக்கும் இந்திய பிரபலம் யார் தெரியுமா? பிரியங்கா சோப்ரா தான்.  நரேந்திர மோடியை விட இவர் அதிகம் பாலோவர் வைத்துள்ளார் என்பது தான் கூடுதல் தகவல். இதற்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா,2 கோடியே 50 லட்சம் பின்தொடர்பவர்களு டன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி வெறும் 1 கோடியே 35 லட்சம் பேருடன் 5-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நடிகை தீபிகா படுகோனே 2 கோடியே 49 லட்சம் பேருடன் இரண்டாமிடத்திலும், விராட் கோலி 2 கோடியே 27 லட்சம் பேருடன் மூன்றாமிடத்திலும், நடிகர் சல்மான் கான் 1 கோடியே 73 லட்சம் பேருடன் நான்காமிடத்திலும் வந்து மோடியை பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.