தயாநிதி மாறன், ஆர்.எஸ். பாரதிகளின் மனநிலைகள் மன்னிக்கத் தகுந்தது அல்ல. சமத்துவம் பேசிய இவர்களுக்கு சாதிய கொம்புகள் முளைப்பது எப்படி? என புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி செயலாளர் ஷ்யாம் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,‘சாதியை உருவாக்கியது இந்து மதம்’அப்போ ‘ஆதி திராவிடர்களை’ உருவாக்கியது யார்? இந்து மத சாதிகள் தோன்றுவதற்கு முன்பே ஆதி திராவிடர் - மீதி திராவிடர் என்று பிரித்தது யார்? எதைவைத்து இவர்கள் ஆதியில் வந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர்? மீதி திராவிடர்கள் எங்கு இருந்து வந்தனர்?

SCஎன்பதாலேயே இட ஒதுக்கீட்டில் தான் படித்திருப்பான் என்ற திராவிட புத்தி எவ்வளவு வஞ்சகம் நிறைந்தது? அம்பேத்கர் அரசியல் சாசனத்தில் கொடுத்த SC இட ஒதுக்கீட்டிற்கு திராவிடம் ‘இனிஷியல்’போட்டுக்கொள்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?! பிச்சையில் இருந்து ‘பரிசுக்கு’ வந்துட்டானுங்க. மாறன், ஆர்.எஸ். பாரதிகளின் மனநிலைகள் மன்னிக்கத் தகுந்தது அல்ல. சமத்துவம் பேசிய இவர்களுக்கு சாதிய கொம்புகள் முளைப்பது எப்படி? குடை பிடிப்பதற்கும், கேட்காமலேயே அறிக்கைகள் விடுவதற்கும் சில கைக்கூலிகளை வைத்திருக்கிறோம், மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று எண்ணி விடக்கூடாது’’ என அவர் தெரிவித்துள்ளார்.