அடுத்த  ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கேரளா மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரி விடுதியில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மொபைல் போன் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை மீறியதால் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனை எதிர்த்து அந்த மாணவி சார்பில் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது வாதிட்ட மனுதாரர், தன்னை போன்ற மாணவர்களுக்கு மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பான அறிவு மறுக்கப்படுவதாக வாதிட்டார். இதனை ஏற்ற ஐகோர்ட், இன்டர்நெட் சேவை என்பது தனிநபர் உரிமை மற்றும் கல்வி உரிமை என தீர்ப்பளித்தது.


கேரளாவில் சுமார் 20 குடும்பங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். இவர்களுக்கு இலவசமாக இந்த அதிவேக இன்டர்நெட் சேவை வழங்கப்பட உள்ளதாகவும், மற்றவர்களுக்கு குறைந்த கட்டணத்திலேயே இந்த சேவை வழங்கப்பட உள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. 

இந்த திட்டத்திற்காக ரூ.1548 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை கேரள உள்கட்டமைப்பு முதலீடு வாரியம், கேரள மின்துறை, ஐடி உள்கட்டமைப்பு துறை உள்ளிட்டகள் மூலம் பெறப்பட உள்ளது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்..