குவைத் பொதுமன்னிப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு வழங்கப்படும் உணவு ஒத்துக் கொள்ளாததால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தாக்குதல் அச்சமும் அதிகரித்திருக்கிறது. அவர்களை உடனடியாக தாயகம் அழைத்து வர வேண்டும் என  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக முழுவதும் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.இந்த குவைத் நாட்டில் முறைப்படியான விசா இல்லாமல் டூரிமஸ்ட் விசா மூலம் அங்கு சென்று சொந்த நாட்டிற்கு திரும்பாமல் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருபவர்களுக்கு  அந்நாட்டு அரசு கொரோனா பயத்தால் பொது மன்னிப்பு கொடுத்து முகாம்களில் தங்க வைத்துள்ளது. அந்த முகாம்களில் தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியில்லாததால் வயிற்றுக் சரியில்லாமலும் உடல் நலம் பாதிக்கப்பட்டும் அந்த முகாம்களில் இருப்பதாக புகார் வந்துள்ளது. அங்கிருக்கும் இந்தியர்கள் அதற்கான சாட்சியாக வீடியோ பதிவு செய்து அனுப்பியிருக்கிறார்கள்.