indian navy air force coast guards in fishermen rescue

ஓகி புயலால் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை தேடும் பணியில், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து ஈடுபட்டுள்ளது.

ஓகி புயல், கன்னியாகுமரி மாவட்டத்தையே மிரட்டி எடுத்தது. தற்போது லட்சத்தீவிலிருந்து 270 கிமீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்துசென்றுவிடும் என்பதால் இனிமேல் தமிழகத்திற்கு பாதிப்பில்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனினும் ஓகி புயல் உருவாகி வலுவடைந்த சமயத்தில், மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்து வருகின்றனர். சுமார் 17 ஹெலிகாப்டர்களில் இந்திய விமானப்படையினர் தேடி வருகின்றனர். சில மீனவர்களை அவர்கள் மீட்டுள்ளனர்.

எனினும் கடலுக்கு சென்ற 500க்கும் அதிகமான மீனவர்கள், இன்னும் கரை திரும்பவில்லை எனவும் அவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி குமரி மாவட்டம் சின்னத்துறையில், பெண்கள், குழந்தைகள் என மீனவ மக்கள் நூற்றுக்கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்துமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். மேலும், மீட்கப்பட்ட மீனவர்கள் லட்சத்தீவு மற்றும் கொச்சி பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்களை தேடும் பணியில் விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல் படை ஆகிய முப்படைகளும் இணைந்து ஈடுபட்டுவருவதாகவும் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடற்படையின் டுவிட்டர் பக்கத்தில், மீட்புப் பணி குறித்த தகவல்கள் பதிவிடப்பட்டுள்ளன.

#HADR #CycloneOckhi #SAR Update - IN Dornier launched to locate 10-15 fishermen stranded 25nm South West / South of Kochi. Seaking helicopter standing by. INS Kabra & Kalpeni despatched from Kochi to augment https://t.co/99g9MEQnEE of search areas for #SAR @DefenceMinIndia pic.twitter.com/fWgZlfqhya
— SpokespersonNavy (@indiannavy) December 2, 2017

அதில், இந்திய கடற்படையின் 8 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களும் கடலோர காவல்படையின் 8 கப்பல்கள் மற்றும் 2 விமானங்களும் விமானப்படையின் 2 விமானங்களும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.