நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் , இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 104 பேரில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன்,   அந்த 40 பேரும் வெளிநாட்டு பயண வரலாறோ,  அல்லது நோயால் பாதித்தவர்களுடன் தொடர்போ இல்லாதவர்கள் என தெரிய வந்துள்ளது.  இதனால் இது  சமூகப் பரவலாக இருக்கக் கூடுமே என சந்தேகிக்கப்படுகிறது,  

இந்தியாவில் கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது . இதுவரையில் இந்தியாவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்,  இந்நிலையில்  இந்த வைரசின் தாக்கம் சமூகத்தில் எப்படி உள்ளது என்பதை தெருந்துகொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தியது, கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களை தேர்ந்தெடுத்து ஆய்வு நடைபெற்றது, அதாவது சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை  அறிந்து கொள்ள (sampling test) செய்யப்பட்டது,    மகாராஷ்டிரா ,  குஜராத் ,  தமிழ்நாடு ,  கேரளா ,  டெல்லி ,  மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அதாவது மகாராஷ்டிராவில் 8 மாவட்டங்களில் இருந்தும் ,  மேற்குவங்காளத்தில் ஆறு மாவட்டங்களில் இருந்தும் ,  தமிழ்நாடு மற்றும் டெல்லியில் தலா 5 மாவட்டங்களில் இருந்தும் sampling எடுக்கப்பட்டது   .  இதில் மிகக் கடுமையான சளி ,  காய்ச்சல்,  தலைவலி மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த,  சுமார் 5,911 பரிசோதனை செய்யப்பட்டது,  அவர்களில் சுமார் 104 பேருக்கு கொரோனா தொற்று  அறிகுறி இருப்பது தெரியவந்தது ,  அதில் சுமார் 40  பேர் எந்த வெளிநாட்டு பயணமோ, அல்லது நோய் பாதித்தவர்களுடன் தொடர்போ வைத்துக்கொள்ளாதவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. எனவே  இது சமூக பரவலாக இருக்கக் கூடுமோ என இந்திய மருத்துவ கவுன்சில் சந்தேகித்து வருகிறது .  குறிப்பாக  வைரஸால் பாதிக்கப்பட்ட  104 பேரில்  85 பேர் ஆண்கள் என்றும் அதில் 83 பேர் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது .  

அதாவது இந்த சோதனை இந்த சோதனை பிப்ரவரி 15 முதல் 29 தேதியிலும் மார்ச் 19 ஆம் தேக்கு இடைப்பட்ட நாட்களில் செய்யப்பட்டது என்றும்  இடைப்பட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்  துவக்கத்தில் 4,946 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோது, 102 பேர் அதாவது,  (2.1 சதவீதம் ) இருந்த  வைரஸ் பரவல் இந்த ஆய்வின் முடிவின் போது  2.6 சதவீதமாக உயர்ந்தது எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்டினல் என்ற பரிசோதனை முறையை கையாண்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது .  அதாவது ஒரு நோய் சமூகத்தில் எந்த அளவுக்கு பரவுகிறது ,  அதன் பாதிப்பு சமூகத்தில் இருக்கிறதா.?  என்பதை கண்டறிய இந்த சோதனையை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு வைரஸை  கட்டுப்படுத்த வேண்டுமெனில் அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது  என்பதற்கான தரவுகள் தேவைப்படுவதால் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது . கொரோனா வைரஸின் தீவிரத்தை கண்காணிக்கவும் அது சமூகத்தில் ஏற்படுகின்ற தாக்கத்தை மதிப்பிடவும் நோயின் பரிமாணத்தை கண்காணிக்க இந்த சோதனை பயன்படுத்துவதாக மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.  தற்போது எந்த தொடர்பும் இல்லாத 40 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பது சமூகப் பரவலாக இருக்கக் கூடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது .