அதலபாதாளத்தில் சென்றுக்கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை மறைக்கவே ப.சிதம்பரம் கைது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்யப்பட்டுள்ளார். இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஜனநாயக நாடான இந்தியாவில் தற்போது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. 

உலகம் முழுவதும் பொருளாதாரம் சரிந்த நிலையிலும், காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் மட்டும் சரியவில்லை. ஆனால், இன்றைக்கு பாஜக ஆட்சியில் நாடு திவாலாகிவிடுமோ என்கிற அளவுக்கு நாட்டின் பொருளாதார நிலை மிகவும் சிரழிந்துள்ளது.. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பை இழுந்து தவித்து வருகின்றனர். 

இவற்றையெல்லாம் மூடி மறைக்கவே மோடி அரசு ப.சிதம்பரத்தைக் கைது செய்துள்ளது. விஜய் மல்லையாவையும், நீரவ் மோடியையும் வெளிநாட்டுக்கு தப்ப அனுமதித்து விட்டு, ப.சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கின்றனர். ப.சிதம்பரத்தைச் சட்டரீதியாகச் சந்திக்க மோடி அரசு அஞ்சு நடுங்கி வருகிறது. ஆனால், இந்தப் பிரச்னையை சிதம்பரம் சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவார் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.