கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்திய மக்கள் ஒன்றுபட்டு போராடி வரும் நிலையில் இந்திய ஆயுதப்படை அவற்றில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்றும்  அதே நேரத்தில் எல்லையில் பாதுகாப்பை குறைத்துக்கொள்ளவில்லை என்றும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார் .  ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் நடைமுறையில் உள்ள நிலையில் அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கும் இந்திய ஆயுதப் படைகள் தயாராக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார் .  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இதுவரையில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 500க்கும் அதிகமானோர் நாடுமுழுவதும் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.  

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  இந்திய எல்லை  கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறி வரும் நிலைகள் எல்லைக் கோட்டில் உள்ள  பயங்கரவாதிகளில் ஏவுதளங்கள் மீதும் இந்தியா குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார் .  கடந்த பல வாரங்களாக பாகிஸ்தான் எல்லை  கோட்டு பகுதியில் ,  அமைதி ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் எல்லைக் கோட்டைத் தாண்டி வருவதுடன் பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவசெய்ய பாக் ராணுவம்  ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளன .  இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் இந்திய ஆயுதப்படை அதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றும் என்றும் அதே நேரத்தில் இந்திய  படைகள் அனைத்து தற் செயல்களுக்கும் தயாராக உள்ளன என்றும் எல்லாச் சூழ்நிலைகளிலும்  எதிரிகளிடமிருந்து நமது இறையாண்மையை பாதுகாக்க  தயாராக உள்ளது என்று தன்னால் நாட்டிற்கு உறுதி அளிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அதேநேரத்தில் கடந்த இரண்டு வாரங்களில் கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறது ,  உளவுத்  துறை தகவலின் அடிப்படையில் எதிரிகளின் ஏவுதளங்கள் குறி வைக்கப்பட்டு வருகிறது ,  எதிரிகள் இந்த மண்ணில் காலடி வைப்பதற்கு முன் அவர்கள் அழிக்கப்படுவர் என ராஜ்நாத்சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார் . கடந்த சில நாட்களில் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக  ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .   எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகள் முழுவதும் பயங்கரவாத தளங்களும் மற்றும் வெடிமருந்து சேமிப்பு கிடங்குகளும் பாக் ராணுவத்தின் தூண்டுதலின்பேரில் நிறுவப்பட்டு வந்த நிலையில் அனைத்துக்கும் கடுமையான பதிலடி இந்திய ராணுவத்தால் கொடுக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளன.