முப்படைத் தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகளை நியமித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது .  இந்தியாவின்  ராணுவ தளபதியாக இருந்தவர்  பிபின் ராவத் ,  எல்லையில் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட நெருக்கடி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ராணுவத் தளபதி என்ற பெயரும் பெற்றார்,  பாதுகாப்பு துறையில்  நீண்ட அனுபவமும் பாதுகாப்பு உத்திகளில் சிறந்த தளபதியாகவும்  விளங்கிய  பிபின் ராவத்தை இந்திய முப்படைகளின் தளபதியாகவும் நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . 

இந்நிலையில் அவருக்கு உதவியாக 37 உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .  இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு  உதவ இரண்டு இணைச் செயலாளர் ,  13 துணை செயலாளர்  , மொத்தம் 22 செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது  . முப்படை தலைமை தளபதி தலைமையில் செயல்படுவதற்காக  ஏற்கனவே ராணுவ விவகாரங்கள் துறை என்ற புதிய துறையையும்  மத்திய அரசு உருவாக்கியுள்ளது .  இதில் ராணுவம் ,  விமானப்படை ,  கப்பற்படை என மூன்று படைகளுக்கும் தேவையான போர்  தளவாடங்கள் மற்றும்  ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் பணிகளும் பிபின் ராவத் தலைமையிலான இத்துறையின் மூலமே மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . 

இனி அதிக அளவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட படைக்கருவிகள் பயன்படுத்துவதை நோக்கமாகவும் அதை ஊக்குவிக்கும் வகையிலும் பாதுகாப்பு துறை செயல்படும் எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் அதிக அதிகாரிகளை கொண்ட ராணுவ தளபதி என்ற அந்தஸ்தையும் பிபின் ராவத் பெற்றுள்ளதால் சர்வதேச அளவில் அதிக சக்தி வாய்த ராணுவ தளபதியாகவும்  பிபின் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.