அத்துமீறி தாக்கதல் நடத்திய பாகிஸ்தானுக்கு, இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில்  நூற்றுக் கணக்காக தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ராணுவத் தளபது பிபின் ராவத்  உறுதி செய்துள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்ய திட்டம் வகுத்து அம்முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் இந்திய ராணுவ துருப்புகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. காஷ்மீர் மாவட்டம் குப்வாரா மாவட்டத்தில்  தங்கார்  பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய குடிமக்கள் இருவர் கொல்லப்பட்டனர்,   இரு ராணுவ  வீரர்களும் இன்னுயிர் நீத்தனர்.  இந்நிலையில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத முகாம்களை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் அப்பகுதியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் 10 பேர் பலியாகினர்,  பாக் எல்லையில் செயல்பட்டு வந்த  தீவிரவாத முகாம்கள் மீது பீரங்கிகள் மூலம் இந்திய ராணுவம் தாக்கியதில் பங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.  இதை இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் உறுதி செய்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர்,  இந்திய ராணுவம் கொடுத்த பதில் தாக்குதலில்  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டுவந்த பயங்கரவாத முகாம்களில் பீரங்கி குண்டுகள் பொழிந்தன என்றார்.  அதில் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகள் முற்றிலுமாக அழைக்கப்பட்டதுடன், அப்போது மூன்று முகாம்களில் தங்கி இருந்த ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், அத்துடன் 10க்கும் மேற்பட்ட பாக் ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்றார்.