Asianet News TamilAsianet News Tamil

உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் இந்தியா.. பெருமையில் மார்தட்டும் பிரதமர் மோடி.

உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது எனவும்,  இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

India is the homeland of the world's oldest language, Tamil ... Prime minister Modi Proud.
Author
Chennai, First Published Sep 11, 2021, 1:06 PM IST

உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது எனவும்,  இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நூறாவது நாள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி தினமாக அரசால் கடைபிடிக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு பாரதியின் புகழுக்கு பெருமை சேர்த்துள்ளார். 

India is the homeland of the world's oldest language, Tamil ... Prime minister Modi Proud.

கவிஞர், எழுத்தாளர், விடுதலை போராட்ட வீரர்,  சமூக சீர்திருத்தவாதி, இதழியலாளர் என பன்முகத்தன்மை கொண்ட பாரதி தன் எழுத்தால், கவியால் மக்கள் மனதில் விடுதலை வேட்கையை ஊட்டியவர், உறங்கிக் கிடந்த மக்களை இந்திய சுதந்திரத்திற்கு போராட தூண்டியவர், அவர் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாரதியில் நூறாவது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டார் பிரதமர் மோடி, அதில், சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் நூறாவது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன், அவரது பெரும்புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முக பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம் என பதிவிட்டிருந்தார். 

India is the homeland of the world's oldest language, Tamil ... Prime minister Modi Proud.

முன்னதாக உத்திரபிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்க அரசின் சார்பில் நிதி வழங்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடியும் தன் பங்கிற்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளஅவர், இந்த சந்தர்ப்பத்தில் இன்று நானும் மகாகவி பாரதியாரின் நினைவு விஷயத்தில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதி பெயரில் தனி இருக்கை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. பி.எச்.யு கலை பீடத்தில் தமிழ் ஆய்வுகள் குறித்த சுப்ரமணி பாரதி இருக்கை நிறுவப்படும் என அவர் கூறியுள்ளார். தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கு பாரதி இருக்கை பயன்படும் என்று மோடி தெரிவித்துள்ளார். மேலும் உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது எனவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

India is the homeland of the world's oldest language, Tamil ... Prime minister Modi Proud.

பிரமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தை சேர்ந்த பலரும் அவரை பாராட்டி வரவற்று தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது, தமிழ், தமிழன், தமிழகம், தமிழினத்திற்காக தொடர்ந்து துணை நிற்கும் பாசமிகு பாரத பிரதமர் மோடி ! எப்பொழுதும் தமிழர்கள் நலன் நாடி.. என்றென்றும் நீங்கள்தான் முன்னோடி! என்றும் பதிவிட்டு வருகின்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios