இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய ராணுவம் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வடக்கு எல்லைகளில் சில மாற்றங்களை செய்திருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தொலைநோக்கு பார்வையுடனும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டும் இந்த மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது என இந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அந்த கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு பகுதியாக ராணுவம் அதன்  பனகர்  தலைமையிடமான மவுண்டன் ஸ்ட்ரைக் கார்ப்பஸ் அல்லது 17வது கர்ப்பஸை  முற்றிலுமாக மறுசீரமைப்பு செய்துள்ளது.  இதன் மூலம் எதிரி நாட்டு படைகளுக்கு சரியான நேரத்தில் எதிர்வினையாற்ற முடியும் என்பதுடன், மலைப் பாதைகளில் விரைந்து செயல்படவும் படைகளை எல்லைக் கோட்டுக்கு விரைந்து கொண்டு செல்லவும், அதிரடியாக தாக்குதல் நடத்துவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

வருடாந்திர பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய ராணுவத்தின் புதிய நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதி நாரவனே செய்தியாளர்களிடம் பேசினார். அதில், பாகிஸ்தானும் சீனாவும் நாட்டுக்கு எதிராக வலுவான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறினார். அந்த கூட்டு அச்சுறுத்தலை தவிர்க்க முடியாது, பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது. ஆனால் இந்தியா தொடர்ந்து பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்க்கும், இந்தியாவால் சரியான நேரத்தில் துல்லியமாக பதிலடி கொடுக்க முடியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் எதிர்கொள்ளும் வகையில் ராணுவம் தயாராக இருக்கிறது. அதேபோல் சீனா கட்டுமான நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ள பகுதிகளில் இந்தியா மிகவும் விழிப்புடன் இருந்து வருகிறது. தற்போது சீனாவின் அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு வடக்கு எல்லையில் குளிர்கால துருப்புகளை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

கிழக்கு லடாக் எல்லையில் நடந்த சம்பவங்கள் நம் ராணுவத்திற்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே அந்த சவாலை மையமாக வைத்து பிராந்தியத்தில் நமது திறமையையும், வலிமையையும் அதிகரிக்கும் வகையில் கட்டமைப்பில் மறுசீரமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. லடாக் அனுபவத்தின் விளைவாக மலைப்பகுதிகளில் போருக்கு தயாராக இருக்கும் இந்தியாவின் மலை ஏற்ற படைப்பிரிவு கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்ய ராணுவம் தயாராகி வருகிறது. மலையேற்றப் படைப்பிரிவுகள் ஒருங்கிணைந்த போர் குழுக்களாக பிரிக்கப்படும்.  ஒவ்வொரு பெட்டாலியனும் ஒரு ஜெனரலால் வழிநடத்தப்படும்.  வடக்கு எல்லையில் 10,000 முதல் 15,000 பேர் கொண்ட படை பிரிவுகளுக்கு மாற்றாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் கொண்ட ஒருங்கிணைந்த போர் குழுக்களை நிறுத்துவதே இந்த திட்டம். இது போன்று 12 முதல் 13 ஐபிஜிக்களை நிறுத்த ராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த போர் குழுக்கள் விரைவாக போருக்கு தயாராகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இது நம் ராணுவத்தின் நீண்டகால  திட்டமாக இருந்தது. இப்போது நாங்கள் அதை நடைமுறைப்படுத்த உள்ளோம். மவுண்ட் ஸ்ட்ரைக்  கார்பஸ்சில் எந்தவிதமான மாற்றங்களும் இருக்காது. ஆனால் துருப்புகள் 34 ஒருங்கிணைந்த போர் குழுக்களாக ஐபிஜிகளாக கட்டமைக்கப்பட உள்ளது. 17 கார்பஸின் ஒருங்கிணைந்த பகுதியாக 34 குழுக்களும் செயல்படும். இந்தப் பிரிவு பொதுவாக ஒரு மேஜர் ஜெனரலால் நிர்வகிக்கப்படும். இதில் 34 படைப்பிரிவுகள் உள்ளன. கிட்டத்தட்ட இதில் 10,000 முதல் 15,000 வீரர்கள் வரை இருப்பர் குறைந்தது ஐபிஜயில் 4000 முதல் 5 ஆயிரம் துருப்புகளாக இருக்கும்.

ராணுவம் 12,13 ஐபிஜிக்களை கொண்டிருக்க திட்டமிட்டுள்ளது.  மேலும் இதற்கு கூடுதல் ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களும் வழங்கப்படும். இந்த ஐபிஜிகளின் நோக்கம் சுறுசுறுப்பான தன்னிறைவு பெற்ற போர் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதுதான். இதன் மூலம் எதிரி நாட்டுக்கு விரைந்து நாம் பதிலடி கொடுக்க முடியும், ஒவ்வொரு ஐபிஜியும்  இந்திய நிலப்பரப்பை பாதுகாத்தல் மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றை எதிர்கொள்ளுதல் என்ற அடிப்படையில் செயலாற்றும். 

சுமார் 12 முதல் 48 மணி நேரத்திற்குள் அவர்கள் போருக்கு தயாராக இருப்பர். அந்த வகையில் இந்த படைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் அதிக உயரத்தில் விரைவான தாக்குதல் என்ற அடிப்படையில் இந்த படைகள் செயல்படும். இந்தப் படைப்பிரிவு கடந்த 2009ஆம் ஆண்டில் கிழக்கு கரையில் ஹிம் விஜய் என்ற  ஒரு பெரிய பயிற்சியின்போது சோதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.