இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.   நோய் வேகமாக பரவி வருவதால் நாட்டு மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர் ,  கடந்த ஆண்டு டிசம்பர் மாதல் இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணம் வுஹானில் தோன்றிய இந்த வைரஸ்  உலகம் முழுவதும்  வேகமாக பரவி வருகிறது ,  கடந்த மாதல் மெல்ல மெல்ல இந்தியாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது காட்டுத்தீயாய் பரவி இந்தியாவிலும் கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது.  இந்த வைரஸ் இந்தியாவில் தீவிரத்தை காட்டத் தொடங்கியுள்ள நிலையில்,  குறைந்தது நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.  இந் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார்  5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  முன்கூட்டியே இந்தியாவில் வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தேசிய  ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார் ,  தற்போது ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது இதனால் நோய் தொற்று கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. 

ஆனாலும் அதன் தாக்கத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை ,  இந்நிலையில் இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது .  இந்த வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  358 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரையில் இந்தியாவில் சுமார் 1,189 பேர் இந்த வைரஸில் இருந்து விடுபட்டு திரும்பியுள்ளனர் .  8, 914  தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . ஆனால் இந்தியாவில் மட்டும் ஐ சி யு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் ஒருவர் கூட இல்லை என, ஐசியுவில் அனுமதிக்கப்படும் அளவிற்கு நோய் தாக்கம் இல்லை என்பது தெரியவந்துள்ளது .  இது குறித்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவக்  ஆராய்ச்சி கழகம் இந்தியாவில் 80% பேருக்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் தென்படுகிறது .  மற்ற 20 சதவீதம் பேருக்கு மிதமான காய்ச்சல் அறிகுறிகள் தென்படுகிறது .  எனவே ஐசியு எனப்படும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் அளவிற்கு நோய் தாக்கம் இல்லை .  இது ஓரளவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளது .  ஆனாலும் நோயின் தாக்கம் நாட்டில் பரவலாக உள்ளது இதுவரையில் இந்தியாவில்  இது  சமூக பரவலாக மாறவில்லை ,  


இரண்டாவது நிலையிலேயே நீடிக்கிறது  என கூறப்பட்டுள்ள நிலையில் மேலும் அடுத்து இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள் முடிவு செய்துள்ள நிலையில்  பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றி உள்ளார் அப்போது அவர் ஊரடங்கு உத்தரவு குறித்து அறிவிப்பார் என தகவல் எதிர்பார்க்கப்படுகிறது தற்போது வரை கிடைத்த தகவலின்படி 2334 பேருடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது இங்கு இதுவரை 160 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் .  1510 பேருடன் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது ,  28 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் .  சுமார் 1, 173 பேருடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது இங்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  ராஜஸ்தான் 873 பேருடனும் ,  மத்திய பிரதேஷ் 604 பேருடனும் ,  தெலுங்கானா 562 பேரிடனும்  , உத்திர பிரதேஷ் 558 பேருடனும் வைரஸ் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் .  அதே நேரத்தில் உலக அளவில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது .  தற்போது வரை 19  லட்சத்து 19 ஆயிரத்து 913 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  இதுவரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 666 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .